சாலொமோனிலும் பெரியவர் இப்பொழுது இங்கே இருக்கிறார் Dallas, Texas, USA 64-0306 1நாம் கர்த்தருடைய வசனத்தைப் படிக்கும்போது, சற்று நேரம் நின்ற வண்ணமாக இருப்போம். இன்றிரவுக்கான வேத வாசிப்புக்கு உங்கள் வேதாகமத்தைத் திருப்ப விரும்புகிறவர்கள் மத்தேயு 12ம் அதிகாரத்துக்கு திருப்புங்கள், 38ம் வசனம் முதல்: அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல், மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவார்கள். தென் தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள். 2நாம் தலை வணங்குவோம். அவருடைய சமுகத்தில் நமது தலைகளும் இருதயங்களும் வணங்கியுள்ள இந்நேரத்தில், இன்றிரவு இங்கு ஏதாகிலும் விண்ணப்பம் இருந்து, ஜெபத்தில் நீங்கள் நினைவு கூரப்பட விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் கைகளையுயர்த்தி, தேவனே, என் விண்ணப்பத்துக்கு செவிகொடும்'' என்று அதன் மூலம் தெரியப்படுத்துங்கள். நாம் ஜெபம் செய்யப் போகையில், மெளனமாக ஜெபியுங்கள். 3எங்கள் பரலோகப் பிதாவே, உம்மை விசுவாசிக்கும் சபையோரைச் சந்தித்தல் என்பதை மகிமைக்கு இப்புறம் நாங்கள் பெற்றுள்ள மிகுந்த கம்பீரமான சிலாக்கியங்களில் ஒன்றாகக் கருதுகிறோம். இங்கு உமது சமுகத்தை நாங்கள் எதிர்பார்க்க முடியும். ஏனெனில் அது உமது வாக்குத்தத்தத்துக்கு ஏற்ப உள்ளது. நீர், “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்'' என்றும், அவர்கள் எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் ஒருமனப்பட்டிருந்து வேண்டிக் கொண்டால், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள். ''(மத் , 18:19) என்றும் கூறியுள்ளீர். கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரு மனப்படக்கூடிய மிகப்பெரிய காரியம் என்னவெனில், நீர் எங்களைச் சந்தித்து, நாங்கள் உமது சமுகத்தைக் காணவும், அதை எங்கள் ஆவிகளில் உணரவும், நீர் இங்கிருக்கிறீர் என்பதை அறிந்து கொள்வதுமே. உமது சமுகத்தில் எங்கள் இருதயங்களை வேண்டுதலோடு ஊற்ற முடியுமென்று உணருகிறோம். நாங்கள் உம்மை தியானிக்கும் இத்தருணத்தில், எங்கள் ஜெபங்களுக்கு உத்தரவு பெறுவோம் என்னும் மகத்தான உணர்வை நாங்கள் பெற அருள்புரியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இப்பொழுது கேட்கிறோம், ஆமென். நீங்கள் உட்காரலாம். 4நாம் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்க செல்வதற்கு முன்பு, கர்த்தருக்கு சித்தமானால், நான் எழுதி வைத்துள்ள சில வேத வாக்கியங்களை ஆதாரமாகக்கொண்டு, ''சாலொமோனிலும் பெரியவர் இப்பொழுது இங்கே இருக்கிறார்' என்னும் பொருளைத் தெரிந்து கொண்டு சிறிது நேரம் பேச விரும்புகிறேன். 5இன்றிரவு நாம் வாசித்த வேதபாகத்தின் துவக்கத்தில் அதில் தான் நமது பொருள் காணப்படுகின்றது, இயேசு பரிசேயர்களுடன் வாக்குவாதம் செய்கின்றார். அவரை அவர்கள் புரிந்து கொள்ளாததன் நிமித்தம் அவர் அவர்களைக் கடிந்து கொள்கிறார். வேத சாஸ்திரத்தில் பயிற்சி பெற்ற வேத சாஸ்திரிகள் அவருடைய வருகையை எதிர் நோக்கியிருந்தனர், ஆனால் அவர் வந்தபோதோ அவர்கள் அவரைத் தவறாகப்புரிந்து கொண்டு, அவரை ''பிசாசு' என்றழைத்தனர். அவர் அவர்களுடைய இருதயங்களிலிருந்த சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிந்ததால்,அவருடைய ஊழியம் பிசாசினால் உண்டானதென்றம், அவர் ஒரு மந்திரவாதி அல்லது குறி சொல்பவர் என்றும் கருதினர். மந்திரவாதமும் குறி சொல்லுதலும் பொல்லாத ஆவிகளினால் உண்டாகும் கிரியையென்று எவருமே அறிவர். ஆனால் தேவனுடைய கிரியையை “பொல்லாத ஆவியினால் உண்டான ஒன்று என்று கூறுதல் தேவதூஷணமாகும். அவர் அவர்களை மன்னித்து விடுவதாக கூறினார். ஏனெனில் அவர்களுடைய இருதயங்களை மிருதுவாக்கி தேவனை அறிந்து கொள்ளும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வர பரிசுத்தஆவி அப்பொழுது இன்னும் வரவில்லை. அவர்களுடைய இருதயங்கள் தேவனை விட்டு வெகுதூரம் இருந்தன. அவர்களுக்குத் தெரிந்த அனைத்தும் குளிர்ந்த வேத சாஸ்திரமாகிய நியாயப்பிரமாணமே. அவர்கள் பரிசுத்த ஆவியை அப்பொழுது பெறவில்லை. அவர், ''பரிசுத்த ஆவி வந்து அதே கிரியைகளைச் செய்யும்போது,அதற்கு விரோதமாகப் பேசினால், அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது'' என்றார். 6இன்று பிற்பகல் இதை நான் படித்து தியானித்துக் கொண்டிருக்கும்போது, எப்படி அவர்களில் ஒருவன் அவரிடம் சுற்றுவழியில் வந்து, “போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வேறுவிதமாகக் கூறினால், யூதர்கள் எப்பொழுதுமே அடையாளத்தை விசுவாசிக்கும்படி கற்பிக்கப்பட்டிரு ந்தனர். யூதர்கள் எப்பொழுதும் அடையாளத்தைக் தேடுகிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார் கள். யூதர்கள் அடையாளத்தின் மேல் சார்ந்திருந்தனர் என்று நாம் காண்கிறோம். இதுவே இந்த பரிசேயனுக்கு விரோதமாக சாட்சி பகரு கின்றது, வேதத்தை அறிவதாக கருதப்படும் அவன், இயேசு மேசியாவின் அடையாளத்தை செய்து காண்பித்துவிட்ட பின்பும், அவனுடைய கண்கள் இருளடைந்திருந்த காரணத்தால் அவனால் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இயேசு அவனுக்கு உண்மையான வேதப்பிரகாரமான வேதத்தில் வாக்களிக்கப்பட்ட மேசியாவின் அடையாளத்தைக் கொடுத்தார். ஆனால் அவனோ வேறுவிதமான அடையாளத்தை எதிர் நோக்கியிருந்தான். 7இன்றைய போதகர்கள் விஷயத்திலும், ஜனங்களின் விஷயத்திலும் அது எவ்வளவு உண்மையாக உள்ளது. அவர்கள் இந்நாளுக்கென தேவனால் வேதத்தில் வாக்களிக்கப்பட்டுள்ள திடமான ஒன்றைக்காண முடிகிறது. அதைக் கண்ட பின்பும், அவர்கள் வேறெதோ ஒன்றை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் இக்காலத்தின் அடையாளத்தை ஏற்றுக்கொள்ளாமல், வேறெதோ ஒன்றைக் காண விரும்புகின்றனர். ஒருமுறை அவர் அவர்களிடம், ''அஸ்தமனமாகிற போது செவ்வானமிட்டிருக்கிறது, அதனால் மந்தார மாயிருக்கும் என்று கூறுகிறீர்கள். வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, ஆனால் காலங்களின் அடையாளங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே' என்றார். உண்மையாகவே மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று வேதம் கூறியுள்ளது. 8தேவன் காரியங்களைச் செய்யும் முறை என்னவெனில், ஒரு தீர்க்கதரிசியை அவர் எப்பொழுதும் அனுப்பி தமது செய்தியை உறுதிப்படுத்துவதே என்று நாமறிவோம். அது ஒரு போதும் தவறினதில்லை, ஒருபோதும் தவறுவதில்லை. தேவன் தமது வழியை மாற்ற முடியாது, அவருடைய முதல் தீர்மானம் எதுவோ, அது அப்படியே இருந்தாக வேண்டும். அவர் கூறுவது எதுவோ, அது உண்மை . தேவன் ஒருபோதும் பெரிய குழுக்களுடன் தொடர்பு கொண்டதில்லை. அவர் எப்பொழுதுமே தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். அந்த வழியில் தான் அவர் தம்முடைய நாமத்திற்கென்று புறஜாதிகளிலிருந்து ஒருகூட்டம் ஜனங்களைத் தெரிந்து கொண்டுள்ளார் - தனிப்பட்ட நபர், அவருடைய நாமத்திற்கென்று ஒன்று இங்கும் ஒன்று அங்குமாக. அவர் தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறாரேயன்றி, குழுக்களுடன் அல்ல. 9அவர்கள் இதை விசுவாசித்த காரணம் என்னவெனில், தீர்க்கதரிசி தேவனால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட சாட்சியாக இருக்க வேண்டும் என்பதனால் என்று நாம் காண்கிறோம். அவன் ஒன்றைக் கூறினால், அது நிறைவேறுகின்றது. அவன் மறுபடியும் ஒன்றைக் கூறினால், அது நிறைவேறு கின்றது. அவன் கூறுவது எதுவோ, தேவன் அது உண்மையென்று உறுதிப்படுத்துகிறார். அவர், ''அவனுக்குச் செவிகொடுங்கள், நான் அவனோடே கூட இருக்கிறேன்''என்றார். அவர்கள் விசுவாசிப்பதாக உரிமைகோரின் மோசே, ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார். அவருக்கு ஜனங்கள் செவி கொடுக்கவேண்டும். இந்த தீர்க்கதரிசியை விசுவாசிக்காதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்,'' என்றான். அது உண்மையென்று நாம் காண்கிறோம். அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ள வில்லை. அவருடைய நாமத்தின் மேல் விசுவாச முள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைப் பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்''. 10இந்த பரிசேயர்களும் சதுசேயர்களும், அவர் என்ன செய்வாரென்று தேவனுடைய வாக்குத்தத்தம் உரைத்திருந்ததோ, அது நிறைவேறுகிறதை அவர்கள் கண்கூடாகக் கண்ட பிறகும், அது அவரளித்த உண்மையான மேசியாவின் அடையாளம் என்று அறியாமல், இன்னமும் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருந்ததாக நாம் காண்கிறோம். ஆனால் பிலிப்பு, அதற்கு முந்தின நாள் எங்கேயிருந்தான் என்று இயேசு அவனிடம் கூறினபோது,அவன் அதை புரிந்து கொண்டான். அவர் மேசியாவென்று அவன் ''நீர் கிறிஸ்து, நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்றான். அவன் அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்ததால், அதை அடையாளம் கண்டுகொண்டான். அவன் அதற்கென்று நியமிக்கப்பட்டிருந்தான். ''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளா விட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' என்று இயேசு கூறினார். வேறு எந்த வழியில் நாம் உள்ளே நுழைய முயன்றாலும், அது தேவனாயிருக்க வேண்டும். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்''. எனவே தெரிந்து கொள்ளுதலைச் செய்வது தேவனே . ''நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்'' என்று இயேசு கூறினார். 11கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்து, ''உலகத்தோற்ற முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் எல்லோரையும் மோசம்போக்குவான். உங்கள் பெயர் தேவனுடைய புத்தகத்தில் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்படுவதற்கு முன்பே எழுதப்பட்டு விட்டது. அவருடைய திட்டம் முழுவதும் தீர்மானிக்கப்பட்டபோது, நீங்கள் அந்த திட்டத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டீர்கள். ஏனெனில் நீங்கள் நித்தியஜீவனைப் பெற்றிருந்தீர்கள். 'நித்தியம்“ என்னும் சொல், துவக்கமும் முடிவும் இல்லாத ஒன்றைக் குறிக்கிறது. நீங்கள் உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே தேவனுடைய சிந்தையில் ஒரு தன்மையாக (attribute) இருந்து வந்தீர்கள். அந்த ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கமுடியும். அவர் உங்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த அந்த ஜீவன் இப்பொழுது உங்களில் உள்ளது. அதை எந்த வழியிலும் பிரிக்க முடியாது. அது அங்கேயே தங்கியிருக்கும். 12இப்பொழுது கவனியுங்கள், இந்த பரிசேயர்கள் மதப் போதகர்களாகவும், வேத சாஸ்திரத்தில் சிறந்த பாண்டித்யம் பெற்றவர்களாகவும் இருந்து, இரவும் பகலும் வேதபுத்தகத்தைப் படித்து வந்த போதிலும்,அந்த மேசியாவின் அடையாளத்தைக் காணத் தவறினவர்களாய், அவரிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்க முயன்றனர். இதை இன்னும் விவரமாக கூறி, தேவன் எப்பொழுதுமே அடையாளங்களை அளிக்கிறார் என்று உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் அவர் இயற்கைக்கு மேம்பட்டவர். அவர் எப்பொழுதும் அடையாளங்களின் மூலமாகவே ஜனங்களிடம் ஈடுபடுகின்றார், வேதப் பிரகாரமான அடையாளங்கள். பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு கேள்வி எழுந்தபோது, யாராகிலும் ஒரு சொப்பனம் கண்டிருந்து (அதன் அர்த்தத்தை உரைக்க தீர்க்கதரிசி இல்லாமற்போனால்), அவர்கள் அவனை ஆலயத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ஊரிம் தும்மீம் என்றழைக்கப்படுவது இருந்தது. வேத போதகர்களாகிய நீங்கள் நான் என்ன கூறுகிறேன் என்பதைப்புரிந்து கொள்வீர்கள். ஆரோன் அணிந்த மார்க்கவசத்தில் பன்னிரண்டு கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு அறிகுறியாக இருந்தன. இந்த தீர்க்கத்திரிசி, அல்லது சொப்பனக்காரன், அது யாராயிருந்தாலும், அவன் தனது தரிசனம் அல்லது சொப்பனத்தைக் கூறின மாத்திரத்தில், அது எவ்வளவு தத்ரூபமாககாணப்பட்ட போதிலும், அந்த மார்க்க வசத்திலிருந்த ஊரிம் தும்மீமிலிருந்து இயற்கைக்கு மேம்பட்ட வெளிச்சம் பிரகாசிக்காமல் போனால், அது நிராகரிக்கப்பட்டது. தேவன் அதை மறுத்து விட்டார். 13ஒன்றை உறுதிப்படுத்த தேவனிடத்திலிருந்து இயற்கைக்கு மேம்பட்ட அடையாளம் உண்டாக வேண்டும். அது எவ்வளவு தத்ரூபமாக, வேதசாஸ்திரத்தில் ஆழமாக, மிகப் பெரிதாக காணப்பட்ட போதிலும், தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட அடையாளம் அதை உறுதிப்படுத்தாமல் போனால், ஒரு யூதன் அதை எற்றுக்கொள்ளமாட்டான். பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்த ஆரோனின் மார்க்கவசம் பழைய உடன்படிக்கையுடன் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையில், தேவன் இன்னமும் ஊரிம் தும்மீமுடன் நிலை கொண்டிருக்கிறார். அதாவது, ஒரு தீர்க்கதரிசி, சொப்பனக்காரன், வேதசாஸ்திர நிபுணன் - அது யாராயிருந்தாலும் சரி- அவன் ஒன்றைப் பேசி, தேவன்அதை தமது வார்த்தையின் மூலம் எதிரொலிக்காமல் போனால், அதை நான் ஏற்காமல் விட்டுவிடுவேன். ஏனெனில் வேதாகமமே தேவனுடைய ஊரிம் தும்மீமாயுள்ளது. அது தேவனுடைய வார்த்தையென்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். தேவன் தமதுசொந்த வார்த்தையாக இருக்கிறார். 14ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.'' ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. அவர் இன்னமும் மாறாதவர். தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை. நாமோ வியாக்கியானம் செய்து, “இதற்கு இது அர்த்தம், அதற்கு அது அர்த்தம்' என்கிறோம். ஆனால் தேவனுக்கு வியாக்கியானி எவரும் அவசியமில்லை. அவரே தமது சொந்த வியாக்கியானி. அவருடைய வார்த்தையை வியாக்கியானப்படுத்த, தேவனுக்கு நாம் அவசியமில்லை, வேதாகமத்தை தனிப்பட்ட முறையில் வியாக்கியானப்படுத்தக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளது. ஆதியிலே தேவன், “வெளிச்சம் உண்டாகக்கடவது' என்றார். அப்பொது வெளிச்சம் உண்டானது. அதுதான் அதன் வியாக்கியானம். தேவன், ”ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றார். அப்படியே அவள் கர்ப்பமானாள். அதுதான் அதன் வியாக்கியானம். அதை வியாக்கியானப்படுத்த யாரும் அவசியமில்லை. இந்த நாளில் இந்த காரியங்கள் நிகழும் என்று தேவன் கூறினார், அவை நிகழ்கின்றன. அதற்கு வியாக்கியானம் எதுவும் அவசியமில்லை. அது தேவன் தமது சொந்த வியாக்கியானத்தைச் செய்வதாகும். அது நிகழ்கின்றது. நாம் எவ்வளவுதான் அதை திரித்து, அதன் அர்த்தம் இதுவல்ல, அதன் அர்த்தம் அதுவல்ல'' என்று கூற முயன்றாலும், அதுவே அதன் சரியான அர்த்தம். தேவனே தமது சொந்த வியாக்கியானி. அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்துகின்றார். அதுவே அவருடைய வியாக்கியானம். ஏனெனில் அது நிறைவேறுகின்றது. 15மத்தேயு 12ம் அதிகாரம் 38 முதல் 40ம் வசனங்களிலுள்ள நபர்கள், 'போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்'' என்று அவரைக் கேட்பதாக நாம் காண்கிறாம். அவர்கள் அவரை விசுவாசியாத்தன் நிமித்தம், அவர் அவர்களைக் கடிந்துகொண்டார். அவர்களுடைய அவிசுவாசத்தில் அவர்கள், அவர் மேல் தங்கியிருந்த ஆவியை “பொல்லாத ஆவி' என்றழைத்தனர். ஏனெனில் அவரை அவர்கள் தங்கள் குருமார்களுடன் ஒன்றுபடுத்த முடியவில்லை, அவர் எங்கிருந்து வந்தார், எந்த வேத பள்ளியிலிருந்து வெளிவந்தார், அவர் பரிசேயனா சதுசேயனா என்றெல்லாம் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொடர்ச்சியாக தங்கள் வேத பள்ளிகளைத் தாக்கிப் பேசி, அவர்களை ஒரு கூட்டம் பாம்புகள் என்றழைத்து வந்தார். அவரை எந்த இடத்திலும் அவர்கள் பொருத்த முடியவில்லை. எனவே அவர்கள், ''இந்த மனிதன் எங்கிருந்து வந்தான்? இவன் எங்கிருந்து வந்தானென்று நாம் அறியோம்'' என்றனர். அவர் மேசியாவென்றும், அவர் அங்கிருக்கிறார் என்றும் அவர்கள் அந்த அடையாளத்தின் மூலம் உணரவில்லை. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீயைக் குறித்து நாம் சென்ற இரவுக்கு முந்தின இரவு பேசினோம். அவள் அதை அடையாளம் கண்டுகொண்டாள். அது அவளில் ஒரு மாறுதலை உண்டுபண்ணினது. அதை அடையாளம் கண்டு கொள்பவர் அனைவரும் அந்த நாளில் அழைக்கப்படவேண்டிய தேவனுடைய வித்தாயுள்ளனர். 16தேவன் எப்பொழுதும் எல்லா காலங்களிலும் தமது ஜனங்களுக்கு ஆவிக்குரிய வரங்களைக் கொடுத்து வந்திருக்கிறார். ஆவிக்குரிய வரங்களின் மூலமாகவே அவர் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு அறியப்படுகிறார். தேவன் ஆவிக்குரிய வரம் ஒன்றை ஜனங்களின் மத்தியில் அனுப்பி, அந்த ஆவிக்குரிய வரத்தை ஜனங்கள் புறக்கணிக்கும்போது, அவர்கள் அந்தகாரத்திலும் குழப்பத்திலும் செல்கின்றனர். காலங்கள் தோறும், ஒவ்வொரு முறையும், தேவன் ஜனங்களுக்கு ஒரு வரத்தை அனுப்பி, அவர்கள் அதை புறக்கணிக்கின்றனர், அந்த ஜனங்கள் தேவனால் புறக்கணிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் தேவனுடைய இரக்கத்தைப் புறக்கணித்துவிட்டனர். ஓ, கிறிஸ்து தேசம் என்றழைக்கப்படும் இத்தேசம் மாத்திரம் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட தேவனுடைய வரத்தை - இக்கடைசி நாட்களில் ஊற்றப்பட்ட மகத்தான பரிசுத்த ஆவியை- ஏற்றுக் கொள்ளுமானால், குண்டுகளிலிருந்து தப்புவதற்கென கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்தலங்கள் அனைத்தைக் காட்டிலும் அது இன்றிரவு எவ்வளவு பாதுகாப்பாக அமைந்திருக்கும்! இந்த தேசம் மாத்திரம் அதை ஏற்றுக் கொள்ளுமானால், அவர்கள் புகுந்து கொள்ளக் கூடிய மற்றெல்லாவிடங்களைக்காட்டிலும் இது அதிக பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அவர்களோ அதை புறக்கணித்து விட்டனர். எனவே, குழப்பமும் நியாயத்தீர்ப்பும் தவிர வேறொன்றும் அவர்களுக்கு விடப்படுவதில்லை. 17எல்லா காலங்களிலும் அவர் இந்த மகத்தான ஆவிக்குரிய வரங்களைக் கொடுத்து வந்துள்ளார். கவனியுங்கள், ஆவிக்குரிய வரம் - உண்மையான வரம் வரும் போது எப்பொழுதுமே; என்றாகிலும் (ஒரு இரவு நான், கர்த்தருக்கு சித்தமானால்), வரத்தின் சத்தம் என்பதைக் குறித்து பேசவிரும்புகிறேன். எப்பொழுதுமே இந்த வரங்கள் வழக்கமாக தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்படுகின்றன. ஒரு தீர்க்கதரிசி காட்சியில் எழும்புவதை நீங்கள் காணும்போது, நியாயத்தீர்ப்பு சமீபமாயுள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. தேவனால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகாட்சியில் எழும்பும்போது, அது நியாயத்தீர்ப்பின் அடையாளமாகத் திகழ்கின்றது. எரேமியாவின் நாட்களில், தானியேலின் நாட்களில், யோவான் ஸ்நானனின் நாட்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாட்களில்- காலங்கள் தோறும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஒரு தீர்க்கதரிசி காட்சியில் எழும்பும் போது, தேவன் தமது வார்த்தையைப் பேசுவதற்கான நேரம் வந்து விட்டது. தேசங்கள் அதைப் புறக்கணிக்கும் போது, குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு முறையும் சபையின் காலங்கள் மாறி, செய்தியானது புறக்கணிக்கப்பட்டபோது, அது அவ்வாறே இருந்தது. தேவன் ஜனங்களுக்கு இந்த வரங்களையும் செய்திகளையும் அளித்து, அவர்கள் அதைப் புறக்கணிக்கும்போது, நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்படுவதில்லை. தேவன் நீதியுள்ளவர். அவர் இரக்கத்தை முதலில் அளிக்காமல் நியாயத்தீர்ப்பை அனுப்புவது கிடையாது. இரக்கம் எப்படி வருமென்று முன்னறிவிக்கப்படுகின்றது. ஆனால் ஜனங்கள் வழக்கமாக, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வெவ்வேறு திட்டங்களின் காரணமாக தங்கள் சிந்தையில் குழப்பமடைந்துள்ளதால், அது வரும்போது அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்வதில்லை. எப்பொழுதும் அது அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளது. 18“பொல்லாத விபசாரச்சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்.'' என்று அவர் அவர்களிடம் கூறினதாக நாம் காண்கிறோம், எத்தனை முறை அவிசுவாசி இதை, ஆவிக்குரிய அடையாளங்களை குறித்து, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதை விசுவாசியாமலிருக்கிறான் தேவன் எப்பொழுதுமே அடையாளங்களின் மூலம் பேசுகிறார். அவர் எக்காலத்தும் அவ்வாறு செய்து வந்துள்ளார். அவர் எக்காலத்தும் அவ்வாறே செய்வார். உலகம் உள்ள வரைக்கும், அவர் ஆவிக்குரிய அடையாளங்களின் மூலமாகவே பேசுவார். அவை வருமென்று அவர் முன்னுரைத்துள்ளார். 19''பொல்லாத அல்லது பலவீனமான விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்'' என்று இயேசு கூறினதை அநேக அவிசுவாசிகள் அப்படியே எடுத்துக்கொள்கின்றனர். கவனியுங்கள். அவர் இருவகை அர்த்தத்தில் இந்த தீர்க்கதரிசனத்தை இங்கு உரைக்கிறார், அவர்கள் பலவீனமுள்ள விபசாரச்சந்ததியார் என்று அவர்களிடம் கூறுகிறார். மற்றும், எந்த ஒரு பலவீனமுள்ள விபச்சாரச் சந்ததியாரும் - இனி வரவிருக்கும் ஒன்றும்- ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அவர் அவர்களிடம் கூறுகிறார். கவனியுங்கள், அவர், ''பலவீனமுள்ள பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனாவின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரியமீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும்பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்,'' என்றார். 20அவர் அங்கு என்ன கூறுகிறார்? அதாவது “பொல்லாத விபச்சாரச் சந்ததியார் உயிர்த்தெழுதலின் அடையாளத்தைப் பெறுவார்கள்' என்று கூறுகிறார். நாம் இப்பொழுது அடைந்துள்ள இந்த காலத்தைக் காட்டிலும் வேறெந்த காலம் கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் பொல்லாத, தாறுமாறான, விபச்சாரச் சந்ததியை கொண்டுள்ளது? இவர்கள் ஒரு அடையாளத்தை- உயிர்த்தெழுதலின் அடையாளத்தை பெறுவார்கள் - அதாவது இயேசு கிறிஸ்து முன்பிருந்தது போல இன்றிரவும் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், ”பலவீனமுள்ள பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த அடையாளம் உயிர்த்தெழுதலின் அடையாளமே. ''அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுவாரென்று அவர் அவர்களிடம் கூறுகிறார். 21அநேக சமயங்களில் வேதவாக்கியம் இருவகை அர்த்தம் கொண்டதாய் உள்ளது (compound meaning). உதாரணமாக, மத்தேயு 3ம் அதிகாரத்தில், ''எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டு நிறைவேறும்படி இப்படி நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நீங்கள் தேடிப் பார்த்தால் அது ஓசியாவில் உள்ளது. ஓசியா, எகிப்திலிருந்து என்னுடைய குமாரனாகிய இஸ்ரவேலை வரவழைத்தேன் என்கிறான். யாக்கோபு தேவனுடைய குமாரன். அவனை அவர் எகிப்திலிருந்து வரவழைத்தார். அதைத்தான் இந்த தீர்க்கதரிசனம் குறிப்பிடுகின்றது.ஆனால் கிறிஸ்து அவருடைய மேலான குமாரன். அவர் அவரை எகிப்திலிருந்து வரவழைத்தார். இஸ்ரவேல் அதற்கு முன்னடையாளம். அது போன்று, அந்த சந்ததியில் அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தல் முன்னடையாளமாயுள்ளது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது அதைக்காட்டிலும் பெரிய புறக்கணித்தல், உயிர்த்தெழுதலைப் புறக்கணித்த அந்த சந்ததிக்காவது மன்னிப்புண்டு. ஆனால் பரிசுத்த ஆவியைக் கேலி செய்யும் இந்த சந்ததிக்கோ மன்னிப்பே கிடையாது. நாம் பரிசுத்த ஆவியைப் புறக்கணிப்பவன், இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மாம்சத்தில் இருந்த நாட்களில் அவரைப் புறக்கணித்தவனைக் காட்டிலும் மோசமானவன். இயேசு அவ்வாறு கூறினார். அவர்கள் அவரைக் குறி சொல்கிறவன் அல்லது பொல்லாத ஆவி கொண்டவன் என்று கூறினபோது, அவர், ''நீங்கள் மனுஷகுமாரனுக்கு விரோதமாக பேசுகிறீர்கள், அது உங்களுக்கு மன்னிக்கப்படும்.ஆனால் எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக ஒருவார்த்தை பேசினால், அது இவ்வுலகில் ஒருக்காலும் மனிக்கப்படாது'' என்றார். அதாவது பரிசுத்த ஆவியின் கிரியைகளை பொல்லாத, அசுத்தமான காரியம் என்றழைப்பது அவர்கள் தேவனுடைய கிரியை நடப்பிக்கப்படுவதை காணும்போது. 22ஆம், பெரிய மீனின் வயிற்றில் இரவும் பகலும் மூன்று நாட்கள் இருந்த யோனா உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாயிருக்கிறான். பலர் யோனாவைக் குற்றப்படுத்தி, மற்றவர்களை, “ஓ, அவன் ஒரு யோனா'' என்று ஏளனம் செய்கின்றனர். யோனா ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனுடைய சித்தத்தில் சரியானபடி நடந்து கொண்டிருந்தான். அவன் மற்றொரு கப்பலில் ஏறி பிரயாணம் செய்தபோது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் காண்பிக்க அது அப்படி நடக்க வேண்டியதாயிருந்தது. அடிமையானவன் சுயாதீனமுள்ளவளுடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்பதைக் காண்பிக்க அது அப்படி நடக்கவேண்டியதாயிருந்தது அடிமையானவன் சுயாதீனமுள்ளவளுடன் சுதந்தரவாளியா யிருப்பதில்லை என்பதைக் காண்பிக்க ஆகார் புறம்பே தள்ளப்பட்டது போல, யோனாவும் அந்த கதாபாத்திரமாக நடிக்க வேண்டியதாயிருந்தது. இவை சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. இவை வரப்போகும் காரியங்களுக்கு நிழல்களாகவும், முன்னடை யாளங்களாகவும் உள்ளன. 23அவர் யோனாவைக் குறித்து பேசி முடித்த பின்பு சாலொமோனின் காலத்துக்கு வருவதை நாம் காண்கிறோம். சாலொமோனின் காலம் பழைய ஏற்பாட்டின் காலத்தின் ஆயிரம் வருட அரசாட்சி என்று நாமெல்லாரும் அறிவோம். இஸ்ரவேலரின் காலம்மிக்க மகத்துவமானது; யுத்தங்கள் எதுவும் இருக்கவில்லை. அவர்களுக்கு மகத்தான தருணம் உண்டாயிருந்தது, தேவன் தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தை அருளியிருந்தார். அவனால் ஜனங்களின் இருதயங்களிலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிய முடிந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த எபிரெயன் அதை அறிந்து கொண்டிருக்கவேண்டும்! சாலொமோனுக்கு சிந்தனைகளைப் பகுத்தறியும் வரம் இருந்தது. அவனால் அவர்களுடைய இருதயங்களிலுள்ள சிந்தனைகளை அறிய முடிந்தது. அவர்கள் எல்லோரும் சாலோமோனை ஆதரித்தனர். ஆனால் இங்கோ சாலொமோனிலும் பெரியவர் நின்று கொண்டிருந்தார். சாலொமோன் தாவீதின் குமாரன். இருப்பினும் அவன் மாம்சத்தில் தோன்றிய சிறிய தாவீதின் குமாரன். ஆனால் இயேசுவோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜரீக சந்ததியாகிய தாவீதின் குமாரன். இங்கோ சாலொமோனிலும் பெரியவர் நின்றுகொண்டு, சாலோமோன் செய்த அதே செயலைப்புரிந்தார். ஆனால் ஒரே வித்தியாசம் என்னவெனில், அவர் சாலொமோனிலும் பெரியவர். ஆனால் அவர்களோ அவரை ''பெயல்செபூல்' என்றழைத்தனர். வேதவாக்கியத்திற்கு எவ்வாறு அர்த்தம் உரைக்கப்படுகிறதென்பதை கவனித்தீர்களா? ''பொல்லாதவிபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுவார்கள்; அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள், அது உயிர்த்தெழுதலின் அடையாளம்' என்று அவர் கூறினதில் வியப்பொன்றுமில்லை. 24சாலொமோனின் காலத்தில் பெரிய எழுப்புதல் உண் டாயிருந்தது. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இதை ஒருவிதமான கதை வடிவில் கூறப்போகின்றேன். சாலொமோனின் நாட்களில் ஒரு பெரிய எழுப்புதல் நடந்து கொண்டிருந்தது. தேவன் ஒரு வரத்தை அருளியிருந்தார், தேசம் முழுவதுமே அதை ஆதரித்தது. எல்லோரும் அதனிடம் வந்தனர். அவர்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசித்தனர். இன்றிரவு ஜனங்களிடையே அப்படி நடந்து, அமெரிக்கா முழுவதுமே, கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர் அனைவருமே, இக்கடைசி நாட்களில் காணப்படும் தேவனுடைய வரத்துக்கு - ஜனங்களின் மேல் ஊற்றப்பட்டுள்ள பரிசுத்தஆவிக்கு - ஆதரவு தெரிவிப்பார்களானால், அது மிகவும் அற்புதமாயிருக்கும் அல்லவா? இக்கடைசி நாட்களின் தேவனுடைய வரம் பரிசுத்த ஆவியே. கிறிஸ்து ஆவியின் வடிவில் இப்பொழுது நம்முடன் இங்கே இருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் எல்லா சபைகளுமே தேவன் நமக்கு அருளியுள்ள இந்த மகத்தான வரத்துக்கு ஆதரவு தெரிவிக்குமானால், அது மிகவும் அற்புதமாயிருக்கும் அல்லவா? அவர்கள் ஏன் அதை ஆதரிப்பதில்லை? அவர்கள் அகன்று பலவிதமான தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் கொள்கை களிலும் சிக்கிக்கொண்டுள்ளனர். எது எதுவென்று உங்களால் சொல்ல முடியாது. அவர்கள் எப்பொழுதும் அவ்வாறே செய்து வந்துள்ளனர். ஆனால் தேவனோ முடிவுகாலத்தில் வித்துக்கு இதை தெளிவுபடுத்திக் கொடுப்பதாக வாக்களித்துள்ளார். 25இதை கவனியுங்கள், இந்த மகத்தான வரத்தை அவர்கள் அனைவருமே ஆதரித்ததாக நாம் காண்கிறோம். இஸ்ரவேல் தேசமும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு வளர்ச்சியடைந்தது. எல்லா தேசங்களும் இஸ்ரவேலுக்கு பயந்தன. தேவன் இஸ்ரவேலருடன் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்ததால், அங்கு வருவதற்கும் கூட அவர்கள் பயந்தனர். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் கம்யூனிஸத்தை ஒழிக்கவேண்டுமென்று பேசுகிறீர்கள், அமெரிக்கா தேவனிடம் திரும்பட்டும் - அவளுடைய வரத்தினிடமும், பரிசுத்தஆவியிடமும் திரும்பட்டும். அப்பொழுது ஜனங்கள் கம்யூனிஸத்தைக் குறித்து கூச்சலிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அது மிகவும் பூச்சரிக்கப்பட்டு, கம்யூனிஸ்டுகள் தாங்கள் யாரென்று அறிந்து கொள்வதற்கு கம்யூனிஸத்துக்கு விரோதமான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியதாயுள்ளது. அது அப்படித்தான் இருக்கவேண்டும். அவர்கள் திரும்பி வரட்டும். 26அண்மையில் பின்லாந்தில் அது நிகழந்தபோது, சகோ.லிண்ட்சே என்னுடன் இருந்தார் என்று நினைக்கிறேன். அவர் சென்ற இரவு இங்கிருந்தார். நான் இங்கு தரிசனத்தில் கண்ட ஒரு சிறுவன்; அங்கு மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டான். நான் இந்நாட்டை விட்டு அங்கு செல்லும் போது, அவன் காண்பதற்கு எப்படியிருப்பான், அவன் எங்கிருப்பான் போன்ற விவரங்களை நான் கூறினதை உங்களில் அநேகர் வேதாகமத்தில் இன்னும் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டான், அவன் வாகன விபத்தில் கொல்லப்பட்டான். அது உங்களில் அநேகருக்கு ஞாபகமிருக்கும். அவன் மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்ட போது, நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அன்றிரவு நாங்கள் மெஸ்ஸ ஹாலிக்கு சென்று கொண்டிருந்தோம். சகோ. லிண்ட்சே , சகோ. மூர், இன்னும்அநேகரும் மெஸ்ஸ் ஹாலியை அடையமுயன்று கொண் டிருந்தோம். அங்கு ஆயிரக்கணக்கானவர்களுடன் நான் பேசும்படி அனுமதித்தனர், பிறகு அவர்களை அனுப்பிவிட்டு இன்னும் அநேகரிடம் பேசும்படி செய்தனர். வழியில் நான்கைந்து 'பிளாக்'குகள் எல்லாமே அடைபட்டு விட்டன. ஜனங்கள் நாங்கள் வருவதைக் காணதெருக்களில் நின்று கொண்டிருந்தனர், அங்குகக்கதண்டம் (crutches) வைத்துக்கொண்டு ஒரு சிறுமி இருந்தாள், அவளுடைய ஒரு கால் மற்றகாலைக் காட்டிலும் குட்டையாக இருந்தது. அவள் சுகமடைந்தாள். அநேக அற்புதங்கள் அங்கு செய்யப்பட்டன. 27இந்த சிறுவன் உயிரோடெழுந்த செய்தி ஒலிபரப்பானது. பின்லாந்தில் 'ராக் அண்டு ரோல் , ' இசை கிடையாது, அப்பொழுது அவர்களிடம் அது இல்லை, அவர்களுடைய வானொலியில் செய்திகளும் முக்கியமான காரியங்களும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. அது ருஷியா வரைக்கும் சென்றது. நீங்கள் ருஷியாவில் வாழ்ந்து நீங்கள் பிறந்த இடம் உங்கள் வீட்டிலிருந்து நாற்பது மைல் இருந்தால், உங்கள் வேலை என்னவென்று காண்பிக்க உங்களுக்கு அனுமதிச்சீட்டு (Visa) அவசியம். இரும்புத்திரை அங்கு மெஷின் துப்பாக்கிகள் கியோப்பியாவில் (Kuopio) தெருக்களில் காணப்பட்டன. அன்றிரவு இந்த செய்தி அங்குஎட்டியதால், தெருக்கள் பல்லாயிரக் கணக்கான ருஷியர்களால் நிறைந்திருந்தன. 28அந்த கம்யூனிஸ்டு இராணுவ வீரர்கள் - ருஷிய இராணுவ வீரர்கள்- சிறு வட்டத் தொப்பிகளை அணிந்து நின்று கொண்டிருந்தனர்; அந்த ஆறு சிறுபின்லாந்து பையன்கள், அந்த சண்டைக்குப் பிறகு, அவர்கள் முகச்சவரம் செய்வதற்கும் கூட போதிய வயதாகவில்லை, வழவழப்பான முகம் கொண்டவர்கள். பெரிய காலணிகளையும், நீண்ட 'கோட்'டுகளையும் அணிந்து, பட்டாக்கத்தியுடன் நான் ஜனக்கூட்டத்தின் வழியாக செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ருஷியர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். நான் அங்கு சென்றபோது, அவர்கள் நேராக (attention) நின்று இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அவர்களுடைய கன்னங்களின் வழியாய் கண்ணீர் வடிந்தது. நான் கடந்து சென்றபோது, அவர்கள் பின்லாந்து இராணுவ வீரர்களை பிடித்து இழுத்து, அவர்களுடைய முதுகில் தட்டி, அவர்களைக் கட்டித்தழுவினர், ருஷியாக்காரன் பின்லாந்துகாரனை முதுகில் தட்டச் செய்யும் எதுவும் அவர்களிடையேயுள்ள யுத்தத்தை நிறுத்தும். அவர்கள், ''மரித்தோரை உயிரோடெழுப்பின அப்படிப்பட்ட தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்'' என்றனர். நண்பனே, அதுதான் இன்றுள்ள காரியம். அவர்களை கம்யூனிஸ்டுகளாக மாற்றியது, குருமார்கள் தேவனுடைய வார்த்தையை விட்டகன்றதே. அவர்கள் அவர்களுடைய பணத்தை அபகரித்துக் கொண்டு, அதற்கு பதிலாக அவர்களுக்கு ஒன்றுமே கொடுக்காமல், அவர்கள் ஒரு விடுதியில் உள்ளவர்களைப் போல் நடத்தினர். அதுதான் உலகில் உள்ள தவறு. 29சாலொமோனின் நாட்களில், சாலொமோன் கர்த்தரிடத்திலிருந்து பெற்றிருந்த அந்த மகத்தான வரத்தை அவர்கள் அனைவரும் ஆதரித்தனர் என்று நாம் காண்கிறோம். ஜனங்கள் வருவதும் போவதுமாயிருந்தனர். எல்லா தேசங்களும் இஸ்ரவேலைக் கண்டு நடுங்கின. இஸ்ரவேலுக்கு விரோதமாக போர் செய்வதற்கு பதிலாக, அவர்கள் சமாதான காணிக்கையை கொண்டுவந்தனர். அவர்கள் அங்கிருந்த மனிதனைக்குறித்து அவ்வளவு பயப்படவில்லை. அவர்கள் ஒற்றுமையாய் வழிபட்ட அந்த தேவனுக்கு பயந்து நடுங்கினர். இன்றிரவு இந்த தேசமும் தேவனுக்குப் பயந்து, நாமெல்லாரும் அவருக்கு மரியாதை கொடுத்து, அவரளிக்கும் பரிசுத்த ஆவியின் வரத்தை நாம் ஏற்றுக்கொண்டு அதை ஆதரித்து, ஒவ்வொரு சபையும் தங்கள் கோட்பாடுகளை முறித்துப்போட்டு கதவுக்கு வெளியே எறிந்து, பலிபீடத்தினருகே வந்து, இக்கடைசி நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்து தமது வார்த்தையை அடையாளம் கண்டுகொள்ளும் வரைக்கும் அங்கு காத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! 30சிலர், “யூதர்கள் பெறுவதற்காகவே அது அருளப்பட்டது. அவ்வளவுதான்'' என்று கூற முயல்கின்றனர். பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, ''நீங்கள் மனந் திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடையதேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். அழைக்கப்படுவதற்கென பூமியில் ஒரு வித்து காத்திருக்கும்வரைக்கும், அதை தம்மிடம் அழைத்துக்கொள்ள பரிசுத்த ஆவி ஒன்று உள்ளது. அது உண்மை. அது இன்னமும் அவ்வாறே உள்ளது. ஆனால் அதுவரும்போது, அது புறக்கணிக்கப்படுகிறதென்று நாம் காண்கிறோம். அதன் காரணமாகத்தான் தேசம் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுகிறது. அதன் காரணமாகத்தான் காரியங்கள் இன்றிரவு இத்தகைய வழிகளில் சென்று கொண்டிருக்கின்றன. 31சாலொமோனின் காலத்தில், அது அவ்வாறிருக்கவில்லையென்று நாம் காண்கிறோம். அவர்கள் எல்லோருமே சாலொமோன் பெற்றிருந்த சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தை ஆதரித்தனர். மற்ற தேசங்கள் தேவனுக்குப் பயந்து நடுங்கின. எல்லா விடங்களிலும் செய்தி பரவினது. ''ஓ, நீங்கள் இஸ்ரவேலுக்குச் சென்று காணவேண்டும். அவர்களுடைய தேவன் ஒரு வரத்தை அவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளார். அவர்கள் அந்த வரம் பெற்றவரை ராஜாவாக நியமித்துள்ளனர். அவர் பெற்றுள்ள ஞானம், சிந்தனைகளைப் பகுத்தறிதல், மனித ஞானத்துக்கு அப்பாற்பட்டது. அது தேவர்களின் ஆதிக்கத்தைச் சேர்ந்தது. அவ்வாறு அஞ்ஞானிகள் கூறினர். அது எப்படியென்று எங்களுக்குப் புரியவில்லை, ஆனால் அவர்களுடைய தேவன் தமது விசுவாசிகளில் ஒருவருக்குள் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளார். அவர்கள் அவரை சிங்காசனத்தில் உட்காரவைத்து, அவர்கள் அனைவரும் அவருக்குச் செவி கொடுக்கின்றனர். இந்த செய்தி தொலைகாட்சி அல்லது தொலைபேசி மூலம் பரவவில்லை. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவினது. 32முடிவில் இந்தசெய்தி சகாரா பாலைவனத்தைக் கடந்து, சேபா (Sheba) என்னும் சிறு நாட்டை அடைந்தது. அது ஒரு அஞ்ஞான நாடு. அவர்களுக்கு ஒரு சிறு ராஜஸ்திரீஇருந்தாள். அவள் நல்ல பெண்மணி என்பதில் ஐயமில்லை. தேவன் இஸ்ரவேல் தேசத்தில் பெரிய எழுப்புதலை அருளியிருக்கிறார், அங்கே பெரிய காரியங்கள் நடக்கின்றன, அவர்களுடைய தேவனுடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவரை அவர்கள் பெற்றுள்ளனர். அவருடைய ஞானம் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகத் திகழ்கின்றது என்னும் செய்தி அவளையடைந்தது. உங்களுக்குத் தெரியும்.'விசுவாசம் கேள்வியினால் வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனால் வரும்'' அது அவள் சிறு இருதயத்தை அசைத்தது. அவள் அதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு வியாபாரிகளின் கூட்டம் வரும் போதும், இந்த ராஜஸ்திரீதன் சேவகர்களை அனுப்பி, அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குசென்று வந்திருந்தால், அவர்களுடன் தனியாக பேச விரும்புகிறேன்''என்று கூறியிருப்பாள் என்பதில் ஐயமில்லை. “ஆம், ராஜஸ்திரீயே. நாங்கள் இஸ்ரவேல் தேசத்துக்கு சென்றிருந்தோம். ஓ, அது மிகவும் அற்புதமாயுள்ளது. நீங்கள் அதைக் காணவேண்டும். அதைப் போன்ற ஒன்று இல்லவே இல்லை. அது மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டது. உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் எல்லோரும் ஒருமனப்பட்டவர்களாய், அவர்களுடைய தேவன் அவர்களுக்களித்துள்ள வரத்தை சுற்றியிருந்து ஒருமனதுடன் அதை விசுவாசிக்கின்றனர். ஓ,அது மிகவும் கம்பீரமான ஒருசெயல் , ஒன்றுமே அவர்களுக்கு மறைபொருளாயில்லை. தேவன் எல்லாவற்றையும் வெளிப்படுத்தித் தருகிறார். எந்த தேசமாகிலும் அவர்களுக்கு விரோதமாக எழும்பி வந்தால், அவர்களுடைய தேவன் அவர்கள் எங்கிருந்து வருகின்றனர் என்பதை வெளிப்படுத்திவிடுகிறார். எனவே எதிரிகள் அங்கு அடைவதற்கு முன்பே, அவர்கள் பதுங்கி அவர்களைத் தாக்கி விடுகின்றனர், ஓ,ஒரு மகத்தான எழுப்புதல் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.'' 33அப்பொழுது அந்த ராஜஸ்திரீ, அவளே அதைக் காணவேண்டுமென்று தன் இருதயத்தில் பசிகொண்டாள். உங்களுக்குத் தெரியுமா, அதில் ஏதோ ஒன்றுள்ளது. மனிதன், தான் ஏதோ ஓரிடத்திலிருந்து வந்து இங்கிருக்கிறான் என்று அறிந்திருக்கிறான். ஆனால் அவன் எதற்காக இங்கிருக்கிறான் என்று அறிகிறதில்லை. அவன் வேறெங்கோ செல்கிறான், அவன் எங்கு செல்கிறான் என்பதையும் அறியாமலிருக்கிறான். நீங்கள் யாரென்றும், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும், நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்றும் உங்களுக்கு எடுத்துரைப்பதற்கு உலகில் ஒரே ஒரு புத்தகம் மாத்திரமேயுண்டு. அதுதான் வேதாகமம். அது ஒன்று மாத்திரமே உங்களுக்கு அறிவிக்கிறது. அது தேவனுடைய புத்தகம். அது தேவனே, வித்து என்றழைக்கப்படும் வார்த்தை வடிவில் தம்மை வெளிப்படுத்தலாகும். அந்த வித்து சரியான நிலத்தில் விதைக்கப் படும்போது, அவர் செய்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் தோன்றச் செய்யும். ஏனெனில் அது தேவனே. ஆனால் அது மற்றெந்த விதையைப் போல் தண்ணீர் பாய்ச்சப்படவேண்டும். இதற்கு விசுவாசம் என்னும் தண்ணீர் பாய்ச்சினால், அவை நிறைவேறும். அதற்குள் ஜீவன் இருக்கின்றது. அதை அறிந்திருந்தது! இப்பொழுது கவனியுங்கள்... 34இந்த விதமாக நடந்த போது, அந்த ராஜஸ்திரீ தேவனுக்காக பசிதாகம் கொண்டாள் என்று நாம் காண்கிறோம். ஓ, தேவனுடைய வரங்கள் மாத்திரம், அவளுக்குச் செய்ததுபோல், ஜனங்களுடைய இருதயத்தில்அவருக்காக தாகத்தை உண்டாக்குமானால் இப்பொழுது நாம் காண்கிறோம். சிறு பிள்ளைகள் வரிசை முழுவதும் இங்கும், மற்றவிடங்களிலும் அமர்ந்துள்ளனர். அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இதை நாம் ஒருவிதமான நாடக வடிவில் அளிக்கலாம். 35அவள் ஒரு அஞ்ஞானி என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.அவள் அதை செய்ய வேண்டுமானால், அவள் ராஜஸ்திரீ என்பதனால், அவள் போவதற்கு தன் அஞ்ஞான பூசாரியின் அனுமதி பெற வேண்டும். அவள் அவனிடம் சென்று தன்பொருத்தனைகளைச் செய்து, இவ்வாறு கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ''மகத்தான பரிசுத்த பிதாவாகிய இன்னார் இன்னாரே, இஸ்ரவேல் ஜனங்களிடையே எழுப்புதல் உண்டாகியுள்ளதை நாமறிவோம். அவர்களுடைய தேவன் தம்மை ஒருமனித உருவில், ஒரு மகத்தான வரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதன் விளைவாக அந்த மனிதன் இருதயத்திலுள்ள இரகசியங்களை அறிகிறார். அவர் அந்த வார்த்தை என்றும், வார்த்தை இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கும் என்றும், அது ஒரு மனிதனில் கிரியை செய்கிறதென்றும் அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். மிகுந்த பரிசுத்தமுள்ள பிதாவே, நான் அங்கு விஜயம் செய்து, நானே அதைக் காண்பதற்கு உங்கள் அனுமதி பெறவிரும்புகிறேன்.'' அவளுக்கு இத்தகைய பதில் கிடைப்பதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது: ''நாம் அந்த எழுப்புதலுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.''அல்லது அது 1964ம் ஆண்டின் கருத்தாகும். என்னவாயிருப்பினும், அவன் இவ்வாறு கூறுகின்றான்: ''அவர்கள் நமது ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நமது ஜனங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. அதற்கும் நமக்கும் எவ்வித தொடர்புமில்லை. நீ போகக்கூடாது. அவர்கள் விபரீத நடத்தை கொண்ட ஒருபைத்திய கூட்டமேயன்றி வேறொன்றுமல்ல. இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தைக்கடந்து வந்தனர் என்பது போன்ற வதந்தியை அவர்கள் நம்புகின்றனர், அதில் ஒரு உண்மையுமில்லை. இதோ நம்முடைய மகத்தான தேவன் சுவரருகில் நிற்பதைக் காண்கிறாய் அல்லவா? அவர்கள் இன்னார் இன்னார். அவர்கள் அநேக முறை இன்னின்ன காரியங்களைச் செய்தனர். ராஜஸ்திரீ வெறுப்புள்ளவளாய் திரும்பிச் சென்றாள். 36ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அதில் ஒன்றுண்டு, தேவன்மனித இருதயத்தில் பசிதோன்றச் செய்வாரானால், அதன் வழியில் எதுவுமே நிற்க முடியாது. ஒத்துழைப்பு இருந்தாலும், இல்லாமற் போனாலும், வேறெதுவாயிருந்தாலும், அவள் அதை கண்டுபிடித்தே தீர வேண்டும்! நேற்றிரவு அந்த ஸ்திரீயைக் குறித்து நான் கூறினது போல- அவள் விடாப்படியாகவும் விடாமுயற்சியுடனும் இருந்தாள் என்று. பாருங்கள், ஏதோ ஒன்று உங்களைப்பற்றிக் கொள்கிறது. நீங்களும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்கிறீர்கள். தேவனுடைய குமாரனாகிய யாக்கோபு ஓரிரவு ஏதோ ஒன்றைப்பற்றிக் கொண்டதுபோல்; அதுவும் அவனைப்பற்றிக் கொண்டது. அவன் நோக்கம் நிறைவேறும் வரைக்கும் - அதனால் அவன் ஆசீர்வதிக்கப்படும் வரைக்கும் - அவன் அதைப் போகவிடவில்லை. அதுதான் உண்மையான காரியம். மனிதன் ஒன்றைப் போலியாகச் செய்யும்போது, அது சரியாக கிரியை செய்வதில்லை;ஆனால் அந்த ஒன்றை நீங்கள் பற்றிக்கொண்டு, அந்த ஒன்றும் உங்களைப்பற்றிக் கொள்ளுமானால், அது நிகழும். 37இன்றிரவு நீங்கள் சுகம் பெறுவதற்காக இங்கு வந்து, பரிசுத்த ஆவி உங்களைப் பற்றிக்கொள்ள அனுமதித்து, நீங்களும் அதைப் பற்றிக் கொள்வீர்களானால், நீங்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வீர்கள். அதைப் பெறாமல் உங்களைத் தடை செய்ய ஒன்றுமேயிராது. இயேசுகிறிஸ்து இரட்சிக்கிறவர் என்று நீங்கள் விசுவாசித்து வரும்போது, இரட்சிப்பின் வல்லமை உங்களை பற்றிக்கொள்கிறது, நீங்களும் அதைப் பற்றிக்கொள்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் நிச்சயம் இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை விசுவாசித்தால், பரிசுத்த ஆவி உங்களைப் பற்றிக்கொண்டு உங்களை அபிஷேகிக்கிறார். நீங்களும் அவரைப் பற்றிக்கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் இடத்தை விட்டு நகர வேண்டியதில்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே அவர் தமது சமுகத்தினால் உங்களை நிரப்புவார், “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள்யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்'' என்று அவர் அன்று செய்ததுபோல். எதோ ஒன்று பற்றிக்கொண்டது! 38நேற்றிரவு நாம் பேசிக்கொண்டிருந்த சீரோபோனிக்கியா தேசத்து ஸ்திரீயை ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது. அவளுக்கு எவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவள் சென்று கொண்டிருந்தாள்.இன்றிரவு நாம் பேசிக் கொண்டிருக்கும் அஞ்ஞானியாகிய இந்த ராஜஸ்திரீயையும் ஏதோ ஒன்று பற்றிக் கொண்டது, அது போன்றே, அஞ்ஞானியாயிருந்து விக்கிரகத்தை வணங்கின சீரோபோனிக்கியா தேசத்தாளாகிய இந்த கிரேக்க ஸ்திரீயையும் ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது. அவர்களை ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது, அவர்களும் அந்த ஒன்றைப்பற்றிக் கொண்டனர். வழியில் எப்பொழுது மேகஷ்டங்கள் இருக்கும். தேவனுடைய உண்மையான அசைவு துவங்குவதை சாத்தான் காணும்போது, அவன் தன்னாலான எல்லாவற்றையும் எறிகிறான். அவன் உங்களுக்கும் அப்படி செய்வான். அவன் உங்கள் வழியிலும் தன்னாலான எல்லாவற்றையும் - எல்லா இடையூறுகளையும் போடுவான். 39அந்த ஸ்திரீக்கு நிறைய இடையூறுகள் இருந்தன என்பதை ஞாபகம்கொள்ளுங்கள். ஆனால் அவளுடைய விசுவாசத்துக்கு எந்த விதமான இடையூறும் இருக்கவில்லை. விசுவாசத்துக்கு இடையூறு கிடையாது. யார் என்ன கூறினபோதிலும், எதுவுமே அதை நிறுத்த முடியாது. நீங்கள் தேவனை சரியாகப்பற்றியிருந்து, தேவன் உங்களைச் சரியாக பற்றியிருப்பாரானால், நாற்பது மருத்துவர்கள் இங்கு நின்று கொண்டு நீங்கள் மரித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களிடம் கூறினாலும்,அதில் ஒரு வார்த்தையும் கூட நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள். இல்லை, ஐயா, இல்லை, ஐயா. ஆகாபின் நானூறு தீர்க்கதரிசிகள் எதிர்த்ததுபோல, நாற்பது குருவானவர்கள் நின்று கொண்டு எதிர்க்கலாம். ஆனால் நீங்கள் மிகாயாவாக இருந்து தேவனைப் பற்றிக்கொண்டிருந்து, தேவன் உங்களைப் பற்றிக்கொண்டிருந்து, அது வேதத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் காண்பீர்களானால், எதுவுமே உங்களை தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் என்னவாயினும் அங்கு நின்றுகொண்டிருப்பீர்கள். ஏனெனில் ஏதோ ஒன்று உங்களைப் பற்றிக்கொண்டுள்ளது. 40தேவன் எங்கோ இருக்கிறாரென்று அந்த ஸ்திரீக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவள் எபிரெயச் சுருள்களை மறுபடியும் படித்து, அதைச் சுருட்டி ஜாடியில் போடுவதை என்னால் காண முடிகிறது. அவள் அஞ்ஞான பூசாரியிடம் மறுபடியும் நடந்து சென்று, ''பரிசுத்த பிதாவே, நீங்கள் கூறுவது ஒருக்கால் உண்மையாயிருக்கலாம். ஆனால், பாருங்கள், என் பாட்டி அந்த விக்கிரகத்தை வழிபட்டு, நீங்கள் அளித்த மத உபதேசங்களை (catechism) படித்தார்கள். என் தாயாரும் அதை படித்தார்கள், என் ஜனங்கள் அனைவரும் அதைப் படித்தனர். அது ஏற்கனவே நடந்த ஒன்றைக் குறித்தது. ஆனால் இதுவரை நான் ஒரு அசைவையும் காணவில்லை. ஆனால் தற்பொழுது அங்கு உண்மையான அசைவு நிகழ்ந்து கொண்டிருப்பதாக அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். அது ஏதோ சரித்திரமல்ல, தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஒன்று'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவனோ, “பிள்ளையே, கவனி. நீ அங்கு சென்றால் உன்னை சபை பிரஷ்டம் செய்து விடுவேன். ராஜஸ்திரீ என்னும் முறையில், அந்த ஜனங்களுடன் நீ தொடர்பு கொள்ளவே கூடாது'' என்று கூறினான். அதே பிசாசு இன்னமும் ஜீவித்துக்கொண்டிருக்கிறது. மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட சபையோரைக் காட்டிலும், தொடர்பு கொள்ளக் கூடிய உயர்ந்த ஜனக்கூட்டம் இவ்வுலகில் வேறில்லை. அது எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது நடைபாதையில் இருந்தாலும்,வேறெங்கிருந்தாலும், அதுவே உயர்ந்த ஜனக்கூட்டம். கவனியுங்கள், தேவனை விசுவாசிக்கும் விசுவாசிகள் பரலோகக் கூட்டம். 41அவளுடைய இருதயம் எதிர்நோக்குதலுடன் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அவள் காண விரும்பினாள். அவள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். அவளுக்கு அதைக்குறித்து ஒன்றுமே தெரியாது, ஆனால் அவள் அதைக்காண விரும்பினாள். அவள் பூஜாரியிடம், “உமக்கு விருப்பமானால், என் பெயரை புத்தகத்திலிருந்து எடுத்துப் போடும், நீர் விக்கிரகங்களைக்குறித்தும், புத்தகங்களைக் குறித்தும் சொல்லிக் கொண்டே வருகிறீர். அப்படி நீர் கூறி வந்த போதிலும், அவை அசையவேயில்லை. அதன் அசைவை நான் இதுவரை கண்டதில்லை. உண்மையான ஒன்று எனக்கு வேண்டும்'' என்று கூறுவது என்னால் கேட்கமுடிகிறது. அவள் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகின்றாள். அத்தகைய ராஜஸ்திரீகள் பலர் இன்று இல்லாதது வருந்தத்தக்கது! சரி. அவள் செல்வதற்காக ஒரு நல்ல உபாயத்தைக் கையாண்டாள் என்று நாம் காண்கிறோம். அதைக்குறித்து நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்க்க வேண்மென்று விரும்புகிறேன். அவளுக்குத் தெரியாது என்று அவள் கூறினாள். யேகோவா யாரென்று கண்டறியவும், முன் காலங்களில் அவர் எப்படி கிரியை செய்தார் என்று அறிந்து கொள்ளவும் அவள் சுருள்கள் அனைத்தும்படித்தாள், “அப்படியானால், அவர்கள் கூறும் இந்த மனிதனுடன் யேகோவா தம்மை அடையாளம் கண்டுகொள்வார். அவர் யேகோவாவாக, உண்மையுள்ள தேவனாக, ஜீவனுள்ளோரின் தேவனாக இருப்பாரானால் ஏதோ ஒரு சிலையோ அல்லது நினைவுச் சின்னமோ, முன்பு ஜீவித்த அல்லது ஜீவிக்காமல் இருந்த ஒருவராக இல்லாமல் இருப்பாரானால்!'' என்று கூறிவிட்டு, புறப்பட்டுச் செல்ல ஆயத்தமானாள். இப்பொழுது அவள் கூறினாள்.... 42அவள் நிறைய பணத்தைக் கூட கொண்டு சென்றாள். அவள் பொன்னையும், வெள்ளைப்போளத்தையும், தூபவர்க்கத்தையும், வெள்ளியையும், கூட கொண்டு சென்றிருப்பாள் என்று எண்ணுகிறேன். அவள் ஒட்டகங்களின் மேல் இந்த சுமையை ஏற்றினாள். அவள், “நான் செல்கிறேன், நானே இது என்னவென்று காணவேண்டும். அது அவர்கள் கூறினபடி இருக்குமானால், அதை நான் ஆதரிப்பேன்.அப்படி இல்லாமற் போனால் அதனுடன் எவ்விததொடர்பும் கொள்ளமாட்டேன்'' என்று கூறினாள். அவள் பெந்தெகொஸ்தேயினருக்கு ஒன்றை கற்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் உங்களைப் பார்த்து நகைத்து உங்களைக் கேலிசெய்யும் நிகழ்ச்சியை ஆதரிக்கின்றனர். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்களை கேலி செய்யும் வானொலி நிகழ்ச்சியை அவர்கள் ஆதரிக்கின்றனர். அது உண்மை . ஆம்,ஐயா . ஏனெனில் அப்படி செய்வது சரியென்று அவர்களுக்குத் தோன்றுகிறது. நிச்சயமாக. “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு'' இயேசு கூறினார். அவளைக் கவனியுங்கள். அவள், ''அது உண்மையாயிராவிடில், என்னுடைய வெகுமதிகளை நான் திரும்பக் கொண்டுவிடுவேன்'' என்றாள். ஆனால் அவளே அதைக்கண்டு, அதைக் குறித்து உறுதி கொள்ளப்போகிறாள். அவள் சுருள்களைப் படித்தாள், அவள் யேகோவா யாரென்று அறிந்திருந்தாள், இப்பொழுது அவள் காணப்போகின்றாள். அவர் முன்பிருந்தால், இப்பொழுதும் இருக்கிறார். அவர் இன்னும் யேகோவாவாக இருக்கிறார். அது இந்நாளுக்கும் பொருந்தும். இயேசுகிறிஸ்து முன்பு என்னவாக இருந்தாரோ, அப்படியே எக்காலத்தும் இருப்பார். அவர் மாறுவதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் உரைக்கிறது. 43அந்த ஸ்திரீ தனக்கு நேரிடும் இடையூறுகளைக் குறித்து பேசிக் கொண்டிருக்கையில், இதுவும் அவளுடைய சிந்தையில் எழுந்திருக்கக்கூடும். ''நான் பாலைவனத்தைக் கடக்கவேண்டும். அது மிகவும் நீளமான ஒன்று. அதை பாலஸ்தீனாவிலிருந்து சேபா வரைக்கும் சகாரா பாலைவனத்தின் வழியாக அளந்து பாருங்கள்.அந்த தூரத்தைக் கடக்க ஒட்டகங்களுக்கு தொண்ணூறு நாட்கள் - மூன்று மாதங்கள் - பிடிக்கும் என்று எண்ணுகிறேன்; அதாவது அவர்கள் தொடர்ச்சியாக ஓரிடத்திலிருந்து மற்ற இடத்துக்குப் பயணம் செய்தால் அங்கு அடைவதற்கு மூன்று மாதங்கள் பிடிக்கும். அவள் அந்த வெப்பமான பாலைவனத்தைக் கடந்து வந்தாள் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். அவள் அதை மனதில் கொண்டிருந்தாள், அவள் அதை செய்தேயாக வேண்டும். அது உண்மையாக தேவனா என்று கண்டு கொள்ள, அவள் பாலைவனத்தைக் கடந்து வெகு தூரம்பயணம் செய்து அங்கு அடைய வேண்டியதாயிருந்தது. ''அவள் இந்த சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள்'' என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவளுக்கு 'ஏர்கண்டிஷன்' செய்யப்பட்ட 'காடிலாக்' கார் எதுவுமில்லை. இங்கு டல்லாஸிலுள்ள சிலருக்கு அதைக் கேட்க தெருவைக் கடந்து வர மனதில்லை. அது உண்மை . அவள் கடைசி நாளில் நிற்பாள் என்பதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் எங்காவது நின்றுகொண்டு அதைக் குற்றப்படுத்துகின்றனர், மற்ற விடங்களிலும் அவர்கள் அவ்வாறே செய்கின்றனர். அவள் பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ,சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்“ என்றார்,கவனியுங்கள். 44அவள் இந்த இடையூறை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அவள் ஒருக்கால் இரவில்பயணம் செய்திருக்கக்கூடும், ஏனெனில் அந்த பாலைவனம் மிகவும் வெப்பமானது. சூரியனுடைய கதிர்கள் நேரடியாக சகாரா பாலைவனத்தின் மேல் விழும்போது, அது உங்களுடைய சருமத்தை அப்படியே எரித்து விடும். அந்த பாலைவனத்தில் அவள் ஒருக்கால் இரவில்பயணம் செய்திருக்கக் கூடும். வேறொரு காரியத்தை நினைவு கூருங்கள். அவள் காணிக்கைகளை சுமை சுமையாக கூடகொண்டு சென்றிருந்தாள். இஸ்மவேலின் குமாரர் குதிரைகளின் மேல் வேகமாக செல்லக்கூடியவர்கள். அவர்கள் பாலைவனக் கொள்ளைக்காரர்கள். அவர்கள் வெள்ளம் போல் திரளாக வந்து, அவளுடன் பயணம் சென்ற சிறு கூட்டம் சேவகர்களையும் அண்ணகர்களையும் கொன்று வீழ்த்தி, அவள் காணிக்கையாக கொண்டு சென்ற கோடிக்கணக்கான டாலர்கள் விலையுள்ள ஆபரணங்களையும், விலையுயர்ந்த தூப்வர்க்கம் வெள்ளைப்போளம் போன்றவைகளையும் கொள்ளையடித்து சென்றிருப்பது எவ்வளவு எளிதாக இருந்திருக்கும் ஆனால் அதைக்குறித்து முக்கியமான ஒன்று என்னவெனில், உங்கள் இருதயம் தேவனைக் காண வேண்டுமென்று தீர்மானம் கொள்ளுமானால் அந்த ஒன்று உங்களை இறுகப்பற்றிக் கொண்டால், நீங்கள் ஆபத்தையோ அல்லது தோல்வியையோ பொருட்படுத்தமாட்டீர்கள். அது எவ்வளவு கடினமாக இருந்தபோதிலும், அதை எப்படியாயினும் பெற்றே தீருவீர்கள். 45நிச்சயமாக அது கொள்ளைக்காரருக்கு ஒரு நல்ல தருணம். அவர்களில் யாராகிலும் வந்து தாக்கியிருக்கக் கூடும். ஆனால் அவளோ ஆபத்தை பொருட்படுத்தவில்லை. இங்கு வியாதிப்பட்டவர்கள் படுக்கையை விட்டு எழுந்து நடக்க பயந்து, “என்னால் முடியுமோ என்று தெரியவில்லை, அப்படி செய்ய எனக்கு பயமாயுள்ளது'' என்று கூறுவது போல்,அவளால் எழுந்து நடக்க முடியுமோ என்னும் எண்ணம் அவளுக்கிருக்கவில்லை. அப்படிப்பட்ட பயம் அவளுக்கில்லை. ஏதோ ஒன்று அவளைப் பற்றிக் கொண்டிருந்தது. இது போன்று நம்மையும் ஏதோ ஒன்று பற்றிக்கொள்ளுமானால், ஏதோ ஒன்று நிச்சயம் நிகழும். அது உங்களைப் பற்றிக்கொள்ளும் வரைக்கும், உங்களால் அப்படி செய்ய முடியாது, அப்படி செய்ய முயலாதீர்கள். ஆனால் அது உங்களைப் பற்றிக்கொள்ளும்போது, அது நிச்சயம் நிகழ்ந்தே தீரும். 46கவனியுங்கள், எத்தனை கொள்ளைக்காரர் பாலைவனத்தில் இருந்தனர் என்பதை அவள் சிந்தித்துப் பார்க்கவேயில்லை.மற்றும் அவள் அங்கு அடையும்போது, அவள் ஏற்றுக் கொள்ளப்படுவாளா?மாட்டாளா? அவள் வேறொரு ஸ்தாபனத்தை சேர்ந்தவள் என்று உங்களுக்கு தெரியும். எனவே அவள் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? கூட்டத்தில் அவள் வரவேற்பு கப்படுவாளா? வருவதற்காக அவளுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவளில் கிரியை செய்து, அவள் வரும்படி செய்தார். எனவே அவளை வழிநடத்தினவர் அவரே அவள் அறிந்துகொள்ள வேண்டுமென்று வாஞ்சித்த அந்த எண்ணத்தை திருப்தி செய்யும் பொருட்டு. ஞாபகம் கொள்ளுங்கள், இது உங்களுடைய வாழ்க்கை . அது அவளுடைய வாழ்க்கை. அதை சரிபடுத்திக்கொள்ள, உங்களுக்கு ஒரு தருணம் மாத்திரமேயுண்டு.ஒருக்கால் இன்றிரவு உங்கள் கடைசி தருணமாக இருக்கக்கூடும். இன்றிரவு நீங்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தால், ஒருக்கால் உங்களுக்கு வேறொரு தருணம் இல்லாமற் போகலாம். 47அது ஒருக்கால் அவளுடைய கடைசி தருணமாக இருந்திருக்கலாம். அதை அவள் உணர்ந்திருந்தாள். அவள் பெற்றிருந்த அவளுடைய குளிர்ந்த, சடங்காச்சாரமான மார்க்கம் சரியா, அல்லது உண்மையில் ஜீவிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறாரா?தன் சொந்த மார்க்கத்தில் அவள் ஒன்றையும் காணவில்லை, ஆனால் மற்ற மார்க்கத்தில் ஏதோ ஒன்றுண்டு என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவர் யாரென்று அவள் படித்து அறிந்திருந்தாள். அவள் காண விரும்பினாள். அவளுடைய வாழ்க்கை ஆபத்தான நிலையையடைந்தது. 48இது என்னுடைய வாழ்க்கை . இன்றிரவு இந்த காரியத்தை நான் சந்தித்தேயாக வேண்டும். நான் நியாயத்தீர்ப்புக்கு வரவேண்டும்.அது போன்று நீங்களும் நீயாயத்தீர்ப்புக்கு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நாம் இருக்கையில் அமர்ந்தோ, அல்லது படுக்கையில் படுத்துக்கொண்டோ, நாம் எங்கிருந்தாலும், இந்த காரியத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் எந்நேரத்தில் தேவனுடைய அலமாரியிலிருந்து உங்கள் சீட்டு வெளியே எடுக்கப்படுமென்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் நியாயத்தீர்ப்பன்று பதில் கூற வேண்டும். நீங்கள் சபை அங்கத்தினராயிருந்தாலும், இல்லாமற்போனாலும், அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. நீங்கள் எப்படியாயினும் பதில் கூற வேண்டும். அதைக் குறித்து மிகுந்த நிச்சயமுடையவர்களாயிருங்கள். உங்கள் அனுபவத்தை தேவனுடன் சரிபார்த்து ஏதோ ஒன்று உங்களை இறுகப்பற்றிக்கொண்டு, உங்களை கோட்பாடுகள், முறைமைகள் போன்றவைகளினின்று விலக்கி, இந்த வார்த்தைக்கு மறுபடியும் உங்களைக் கொண்டு வந்துள்ளதா என்பதைக் கவனியுங்கள். பிள்ளைகளுடைய இருதயங்கள் பிதாக்களிடத்திற்கு கடைசி நாட்களில் திரும்பும்'' என்று அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அதை நாம் விசுவாசிக்கிறோம். கவனியுங்கள், அதை நாம் இந்நாளில் காண்கிறோம். 49அவள் பயத்தைக்குறித்தோ வேறெதைக் குறித்தோ சற்றேனும் எண்ணவில்லை. அதொன்றும் அவளைத் தொல்லைப்படுத்தவில்லை. அவள் அதைக் குறித்து எண்ணவேயில்லை. அவளுக்கிருந்த கருத்து என்னவெனில், அது உண்மையா இல்லையாவென்று கண்டுகொள்ள விரும்பினாள். எனவே அவள் பாலைவனத்தைக் கடந்துசென்றாள்.... அப்படி செய்தது அவளுக்குக் கடினமாயிருந்தது. உங்களுக்குள்ள எதுவும் அதுதான் தொல்லை. பெந்தெகொஸ்தேராகிய நமக்கு தேவையான அனைத்தும் தாம் பாளத்தில் வைக்கப்பட்டு எளிதாக அளிக்கப்படுகின்றன. போதகர் நேரத்தோடு வராவிட்டால், ''நான் அசம்பிளீஸை விட்டு 'சர்ச் ஆஃபகாட்டை சேர்ந்து விடுகிறேன்'' என்கிறோம். உங்களுக்குத் தெரியும், அது ... நாம் குழந்தைகளைப் போல் அதிகம் செல்லம் கொடுக்கப் படுகிறோம். 50இது ஒன்றை எனக்கு ஞாபக மூட்டுகிறது. ஒரு காலத்தில் கடலிலிருந்து எடுக்கப்பட்ட உப்பு ஒன்றிருந்ததாம். கடலையே காணாத கவிஞன் ஒருவன் இருந்தான். அவன் கடலைக் குறித்து கவிதைகள் எழுதியுள்ளானே யன்றி, அதைக் கண்டதில்லை. அவன் கடலைக் காணப் புறப்பட்டபோது, உப்பு அவனை சந்தித்ததாம். உப்பு அவனிடம், “நல்ல மனிதனே, எங்கு செல்கின்றாய்?'' என்று கேட்டது. அதற்கு, கவிஞன்,''நான் கடலைக் காணச் செல்கின்றேன். நான் கவிஞன். கடலைகள் குறித்த கவிதைகள் எழுதியுள்ளேன். கடல் நீரை முகரவும்,பெரிய கடல் அலைகள் எழும்புவதைக் காணவும், கடல் பறவைகள் பாடுவதைக் கேட்கவும், நீலவானம் தன்னை கடலில் பிரதிபலிப்பதைக் காணவும் எனக்கு மிகுந்த ஆசையுண்டு'' என்றானாம். உப்பு நான்கைந்து முறை புகை பிடிக்கும் குழாயிலிருந்து (Pipe) புகையை இழுத்து வெளியே ஊதி, கீழே நோக்கி, எச்சில் துப்பி, 'எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நான் அதில் பிறந்தேன். கவர்ச்சி தன்மை கொண்ட எதுவும் அதில் உள்ளதாக எனக்குப் புலப்படவில்லை'' என்றதாம். அது நீண்ட காலம்அதில் வாழ்ந்த காரணத்தால், எல்லாமே சாதாரணமாகத் தோன்றினது. இன்றிரவு நம்மிடையேயும் அது போன்ற ஒன்று காணப்படுகின்றது. நாம் தேவனுடைய சமுகத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்த காரணத்தால், அது நமக்கு சாதாரணமான ஒன்றாக புலப்படுகின்றது. நாம் உறக்கத்தினின்று விழித்துக்கொண்டு, இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தாரென்றும் உணர வேண்டியவர்களா யிருக்கிறோம். 51இந்த ராஜஸ்திரீக்கு அது புது அனுபவமாக இருக்கும். அவள் விடாப்பிடியாக இருந்து, அதைக் காண வேண்டுமென்று விரும்பினாள். நிச்சயமாக, அவள் விடாப்பிடியாக இருந்தாள். அவள் தன் தேசத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல, விடாப்பிடியாக இருக்க வேண்டியதாயிருந்தது. அவள் தன் கெளரவத்தை யெல்லாம் விட்டு விட வேண்டியதாயிருந்தது. அவள் சேர்ந்திருந்த சீட்டுக் கச்சேரி சங்கங்களையும், தையல் தைக்கும் குழுக்களையும், ராஜஸ்திரீ என்னும் முறையில் அவள் கொண்டிருந்த புகழ் அனைத்தையும் அவள்விட்டு விட வேண்டியதாயிருந்தது. அவர்களின் பார்வையில் அவள் இகழ்ச்சிக்குள்ளானவளாய் இருந்திருப்பாள். ஆனால் அதனால் அவளுக்கென்ன கவலை? அவளுடைய ஆத்துமாவே அவளுக்கு முக்கியம் வாய்ந்தது. அது உங்கள் ஆத்துமா, அது என் ஆத்துமா, அதனால் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரர்; அது யாராயிருப்பினும், அவர்களுக்கு என்ன கவலை? என் ஆத்துமாவைக் குறித்து நான் கவலைகொள்ள வேண்டிய வனாயிருக்கிறேன். உங்கள் ஆத்துமாவைக் குறித்து நீங்கள் கவலைகொள்ள வேண்டியவர்களாயிருக்கி றீர்கள். உறுதிப்படுத்தப்படுகின்றது தேவனுடைய வார்த்தையே. 52யார் என்ன கூறினபோதிலும்; புகழ் வாய்ந்த அவளுடைய கூட்டாளிகள், நண்பர்கள் என்ன கூறினாலும், அது அவளைப் பாதிக்கவில்லை. அது உண்மையாயிருந்து, உலகத்திலுள்ள அனைத்தையும் அவள் விட வேண்டு மெனும் நிலை ஏற்படுமானால், அவள் அதற்கு ஆயத்தமாக இருந்தாள். அவள் தன் ராஜ்யத்தையும் கொடுத்து விட ஆயத்தமாயிருந்தாள். அது உண்மையாயிருக்குமானால், அவள் தேவனைக் கண்டு கொள்ள விரும்பினாள். அவளுடைய இருதயத்தில் ஏதோ ஒன்று குடிகொண்டிருந்தது. அவள் பாலைவனத்தைக் கடந்து அங்கு அடைந்தாளென்று நாம் காண்கிறோம். ஒவ்வொரு நாளுமாக தொண்ணூறு நாட்கள் பயணம் செய்து முடிவில் மூன்று மாதங்கள் கழித்து பயணிகளின் கூட்டம் சாலோமோன் அரண்மனை வாசலையடைந்தது. இன்று கூட்டங்களுக்கு அநேகர் ஒருவித மனப்பான்மை கொண்டவர்களாய் வருவது போல் அவள் வரவில்லை. அநேகர் இன்று, 'அவர்களிடம் உள்ளதாக கேள்விப்படுகிறேன். யாரோ ஒருவர் அவர்களிடம் உள்ளதாக என்னிடம் கூறினார். ஊ, ஊ, சரி நான் சென்று பார்க்கிறேன்'' என்று கூறி வருகின்றனர். அவர்கள் சிறிது நேரம் உட்காருகின்றனர். அவர்களை நீங்கள் கவனிப்பீர்களானால், அவர்களை எங்கும் காணலாம். அவர்கள், 'அவர் கூறும் முதல் வார்த்தையே என் விசுவாசத்துக்கு முரணாயுள்ளது. நான் மறுபடியும் இக்கூட்டங்களுக்கு செல்லவே மாட்டேன்'' என்று கூறிவிட்டு வெளியேறுகின்றனர். பாருங்கள், அவர்கள் போதிய நேரம் அங்கு உட்காருவதில்லை. அதுதான். 53இயேசு அந்த எழுபது பேருக்கு முன்பாக உட்கார்ந்திருந்த போது எப்படியிருந்தது? அவளுக்கு எழுபது பேர் மாத்திரமல்ல, திரளான கூட்டமும் உண்டாயிருந்தது. அவர் பெரிய மனிதனாகக் கருதப்பட்டார். அவர்கள், “இவர் ஒரு தீர்க்கதரிசி, அந்த கலிலேய தீர்க்கதரிசி'' என்றனர். ஒரு நாள் அவர் தம்மைச்சூழ நிற்கும் திரளான கூட்டத்தை நோக்கி, 'நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை'' என்றார். அங்கு உட்கார்ந்திருந்த மருத்துவர்கள் இந்த மனிதனைக் குறித்து என்ன கூறினர் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 'அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணி, அவருடைய மாம்சத்தைப் புசிப்பதா? இவர் நம்மை இரத்தம் குடிக்கும் பூதங்களாக (Vampires) ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!''என்றனர். அவர் அதற்கு விளக்கம் தரவேயில்லை. அவர் அதற்கு விளக்கம் தரவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் தம்மைச் சுற்றிலுமிருந்த ஒட்டுண்ணிகளை (Parasites) உதறித்தள்ள வேண்டியதாயிருந்தது. அவர்களுக்கு செல்லம் கொடுத்து அவர்களுடைய பெயர்களைப் புத்தகத்தில் எழுதுவதற்கு பதிலாக, அவர் அவர்களை உதறித் தள்ளினார். அவர்களால் அவருக்கு எவ்வித உபயோகமுமில்லை. எனவே அவர், ''புசியாமலும், பானம் பண்ணாமலும் இருந்தால்...''என்று கூறினதாக காண்கிறோம். அவர் அதற்கு விளக்கம் தரவேயில்லை. 54கவனியுங்கள், அந்த சீஷர்கள் அமைதியாக உட்கார்ந் திருந்தனர். அவர்கள் ஒன்றுமே கூறவில்லை. அங்கிருந்த மருத்துவர்களும் பரிசேயர்களும், “பாருங்கள், இந்த மனிதனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டு விட்டது. அவனுக்கு பயித்தியம் பிடித்து விட்டது. அவனுடைய உடலை நாம் அறுத்து அதை உண்ண வேண்டுமாம், அவனுடைய இரத்தத்தை நாம் குடிக்க வேண்டுமாம்! இரத்தம் குடிக்கும் மானிட பூதம்! அப்படிப்பட்ட செயலை நாம் புரிய முடியாது. ஓ, அது பயித்தியக்காரத்தனம். அந்த மனிதனுக்கு புத்தி தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு அவர், அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருக்கிற எழுபது வேதசாஸ்திர நிபுணர்களை நோக்கி, “மனுஷ குமாரன் தாம் இறங்கி வந்த பரலோகத்துக்கு ஏறிச்செல்வதை நீங்கள் காணும்போது என்ன கூறுவீர்கள்?'' என்று கேட்டார். வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர்கள் சுற்று முற்றும் பார்த்து, ''மனுஷகுமாரன் தாம் இறங்கி வந்த பரலோகத்துக்கு ஏறிச் செல்வதா? இவரை நமக்கு நன்றாகத் தெரியுமே! அவர் பிறந்த தொழுவத்துக்கு நாம் சென்றிருக்கிறோம். அவரை ஆட்டின தொட்டிலை நாங்கள் கண்டிருக்கிறோம். அவருடைய தாயார் யாரென்று நமக்குத் தெரியும். நாம் அவர் நம்முடன் மீன் பிடிக்கிறார், நம்முடன் வேட்டையாடுகிறார். இந்த மலைகளுக்கு தான் அவர் வேட்டையாடச் செல்கிறார். நாம் உடுக்கும் அதுபோன்ற உடைகளையே அவரும் உடுக்கிறார், நாம் உண்ணும் உணவையே அவரும் உண்கிறார், அப்படியானால் மனுஷகுமாரன் என்று கூறிக்கொள்ளும் இவர் எங்கிருந்து வந்தார்? அவர் நாசரேத்தூரிலிருந்து அல்லவா வருகிறார். இதை எங்களால் ஏற்றுக்கொள்வது கடினம்'' என்று கூறிவிட்டு அவரைவிட்டுப் போய் விட்டனர். அவர் அப்பொழுதும் அதற்கு விளக்கம் தரவில்லை.பாருங்கள்? 55அவர் பன்னிருவரை நோக்கி, ''நீங்களும் போய் விட மனிதாயிருக்கிறீர்களோ?''என்றார். அவர்களாலும் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவர்களைப் பற்றிக்கொண்டது. பாருங்கள், அவர்கள் அறிந்திருந்தனர். அப்பொழுது தான் பேதுரு நாம் மறக்க முடியாத இந்த வார்த்தைகளைக் கூறினான்: ''ஆண்டவரே, வேத வாக்கியங்கள் உம்மால் உறுதிப்படுத்தப்படுவதை நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். நாங்கள் எங்கே போவோம்? ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டு என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீரே ஜீவஊற்று. இதைக் குறித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம்.'' இயேசு, ''பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொண்டேன். உங்களில் ஒருவன் பிசாசாயிருக்கிறான்'' என்றார். பாருங்கள், அவருக்கு பயம் எதுவுமில்லை. அவர் நாசுக்காக பேசவோ, செல்லம் கொடுத்து அவர்களை முதுகில் தட்டிக்கொடுத்து, இரகசியமாக ஞானஸ்நானம் கொடுக்கவோ, அப்படியொன்றம் அவர் செய்யவில்லை. அவர் பூமியில் மாம்சத்தில் தோன்றின் தேவனாக இருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுதலாகத் திகழ்ந்தார். பசியுற்றோர் அவரிடம் வந்தனர். பசியில்லாதோர் அவரிடம் வர முடியவில்லை அவர், ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் ''என்றார். ஒருவன் கொடுக்கப் படாதிருந்தால், எப்படி வரமுடியும்? 56கவனியுங்கள், இந்த ராஜஸ்திரீ முடிவில் அங்கு அடைந்தாளென்று நாம் காண்கிறோம். மற்றவர்கள் போல அவள் காத்திருக்கவில்லை. சிலர் அவளைப் பின் தொடர்ந்தனர். எப்பொழுதுமே மூவகைசாராரர் உள்ளனர்: விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள். அவிசுவாசி உடனடியாக எழுந்து நடந்து சென்று விடுவான். பாவனை விசுவாசி நீண்டகாலம் நின்று கொண்டிருப்பான். மூவகைசாரார் இருந்தனர்; அவிசுவாசி, பெரிய கூட்டம்; பாவனை விசுவாசி, கடைசியாக வெளிசென்ற கூட்டம். ஆனால் அங்கு ஒரு உண்மையான விசுவாசி இருந்தான், அவனால் அதற்கு விளக்கம்தர முடியவில்லை. அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் அவர் வார்த்தை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அத்துடன் அது முடிவு பெற்று விட்டது! 57அந்த ராஜஸ்திரீயை நாம் காண்கிறோம். அவள் அதிக உணவை, அநேக ரொட்டி துண்டுகளையும், இன்னும் அநேக பொருட்களையும் கொண்டு சென்றிருந்தாள். அவளுடைய கூடாரங்களையும் மற்றவைகளையும் கூட அவள் கொண்டு சென்றிருந்தாள். இவைகளை அவள் முற்றத்தில்- ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் இறக்கினாள். அது சரியா தவறா என்று உறுதி கொள்ளும் வரைக்கும், அவள் அங்கேயே தங்கியிருக்க தீர்மானித்து, தன் கூடாரங்களை நாட்டினாள். ஒவ்வொரு நாளும் அவள் அந்த வேதவாக்கியங்களைப் படித்தாள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் ஒருக்கால் இரவு நேரங்களில் பயணம் செய்திருக்கக்கூடும். பகல் நேரத்தில் அவள் பாலைவனச் சோலையிலிருந்த பனை மரங்களின் நிழலில் உட்கார்ந்து கொண்டு, யேகோவா என்னவாயிருந்தார் என்றும், அவர் என்னவாயிருந்ததாக கருதப்பட்டாரென்றும் படித்தாள். யேகோவாவைக் குறித்த அறிவை அவள் பெற்றிருந்தாள். அவர் அந்த மனிதனுக்குள் இருப்பாரானால், அவனுடைய கிரியைகளின் மூலம் அவள் அதை அறிந்துகொள்வாள். அவர் அவனுக்குள் இருப்பது சரிதானா இல்லையா என்பதை அவள் கண்டுகொள்வாள். எனவே அவள் வேதத்தில் கூறப்பட்டவைகளை நன்கு அறிந்திருந்தாள். 58அவள் அங்கு சென்று, என் பூஜாரி கூறுவதைக் காட்டிலும் வித்தியாசமான ஒன்றை அவர் கூறினால், நான் ஒட்டகத்தின் மேலேறி சென்றுவிடுவேன்' என்று கூறவில்லை. அவள் உறுதி கொள்ளும்மட்டும் அங்கு தங்க தீர்மானம் கொண்டாள். ஓ, இன்று மனிதர்களும் ஸ்திரீகளும் அப்படி செய்வார்களானால் எவ்வளவு நலமாயிருக்கும்! வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவி இந்நாளுக்குரியதா இல்லையாவென்பதை அறிந்துகொள்ளுங்கள். நாம் பேசிக் கொண்டிருக்கும் இக்காரியங்கள் நாம் வாழும் இம்மணி நேரத்தில் நிறைவேறுமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுகொள்ளுங்கள். அவள் அப்படி செய்தாள்; அதனால் தான் இயேசு அவளுடைய பெயர் பிழையற்றது (infallible) என்பதாக கூறினார். பிழையற்றதல்ல, அது என்றென்றும் அழியாதது (immortal). அவள் நியாயத்தீர்ப்பின் நாளிலே எழுந்து நின்று டெக்ஸாஸிலுள்ள டல்லாஸை குற்றப்படுத்துவாள். நியாயத்தீர்ப்பின் நாளிலே அவள் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குற்றப்படுத்துவாள். ஏனெனில் அவள் பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள்; இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் - உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது உயிர்த்தெழுந்த வல்லமையுடன் இங்கே இருக்கிறார். 59கவனியுங்கள். அவள் கூடாரம் போட்டாள். இங்குள்ள (பிள்ளைகளுக்காக இதை கூற விரும்புகிறேன்). மணிகள் அடித்தன, எக்காளங்கள் முழங்கின, சபை ஆராதனை துவங்கினது, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு சபை ஆராதனை இருந்தது. அதை யோசித்து பாருங்கள், அவர்கள் தினந்தோறும் சபைக்குச் செல்ல விரும்பினர். சபை ஆராதனை துவங்கினது. இந்த ராஜஸ்திரீ அங்கு போய் பின் வரிசையில் உட்கார்ந்திருப்பாள் என்று எண்ணுகிறேன். சற்று கழிந்து, எல்லா எக்காளங்களும் முழங்கின, பாடல்கள் பாடப்பட்டன, மற்றவையும் நடைபெற்றன. சிறிது நேரம் கழித்து, போதகர் சாலொமோன் வெளியே வந்து உட்கார்ந்தான். ஜனங்கள் அனைவரும் அவனை மதித்தனர். ஏனெனில் அவர்கள் அவனை நேசித்தனர். அவன் தேவனுடைய ஊழியக்காரன். அவன் வெளியே வந்த போது, ஒருவனும் கூட, ''ஊ, அவன் இதை சேர்ந்திருந்தால், அவன் என் குழுவை மாத்திரம் சேர்ந்திருந்தால்!'' என்று கூறவில்லை. அங்கு ஒரு குழு மாத்திரமேயிருந்தது. அது அவர்கள். எனவே அவர்கள் அங்கு குழுமியிருந்தனர். 60அங்கு ஒருவர் வருவதை நாம் காண்கிறோம். சாலொமோன் அவர்களுடைய இருதயத்தில் மறைந்திருந்த இரகசியங்களை வெளிப்படுத்தினான். அந்த ராஜஸ்திரீ, “ஒருநிமிடம் பொறு. என்னே, அது எவ்வளவு உண்மையாயுள்ளது!'' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது, அடுத்தபடியாக ஒருவர் வருகிறார், அதே போல் நடக்கிறது, ஓ, அவளுடைய இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளியது. அவள் வியந்தாள். அவள் ஒருஜெப அட்டையை பெற்று காத்திருக்கக்கூடும். (அப்படி கூறுவதனால் மன்னிக்கவும். நான் கூற வேண்டியதை வலியுறுத்தவே இவ்வாறு கூறுகின்றேன்.) அவள் ஒரு ஜெப அட்டையைப் பெற்று காத்திருக்கக்கூடும். ஒரு நாள் அவளுடைய ஜெப அட்டை எண் அழைக்கப்பட்ட போது, அவள் சாலொமோனின் மூலம் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியின் முன்னிலையில் வந்து நின்றாள், ”ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்க வில்லை என்று வேதம் கூறுகிறது. மகத்தான பரிசுத்த ஆவியானவர், அவள் கேட்பதற்கு அவசியமாயிருந்த ஆவியானவர், அவள் கேட்பதற்கு அவசியமாயிருந்த அனைத்தையும் வெளிப்படுத்தினார்; அவர் அதை வெளிப்படுத்தினார். இதோ பரிசுத்த ஆவியானவர் தமது பரிபூரணத்தில் இயேசுவுக்குள் வாசமாயிருந்து, அதே காரியத்தை செய்துவந்தார். இருப்பினும் அந்த பரிசேயர்கள், ''எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும், இங்குள்ள மனிதனை சுகப்படுத்தும். இதை செய்யும், இதை சொல்லும், இது எப்படியிருக்கும், அது எப்படியிருக்கும்?'' என்றனர். 61அந்த ராஜஸ்திரீஅங்கு நின்றபோது, ''ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை'' என்று வேதம் கூறுகிறது. அவள் அறிய வேண்டிய அனைத்தையும் அவன் வெளிப்படுத்தினான், அவன் அதைக் குறித்தெல்லாம் அவளிடம் கூறினான். அப்படி நிகழ்ந்தபோது, மற்றவர்கள் இதைக் குறித்து அவளிடம் கூறினதை ஏற்றுக்கொள்ள அவளுக்கு அவசிய மிருக்கவில்லை. அவள் அதை கண்கூடாகக் கண்டாள், அதை விசுவாசித்தாள். அவள் அங்கிருந்த கூட்டத்தினரின் பக்கம் திரும்பி, 'நான் கேள்விப்பட்ட போது, இதைக் குறித்து வியந்தேன். ஆனால் நான் கேள்விப்பட்ட அனைத்தும் உண்மை, நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக் கிறது'' என்றாள். பாருங்கள், அவள் அழைக்கப்பட்ட நேரம் வந்தபோது, அவள் அதைக் கண்டாள். அது அவளிலே கிரியை செய்தது. அது உண்மையென்பதை அவள் அறிந்து கொண்டாள். அவள், ''உம்மை தம்முடைய ஊழியக்காரனாக நியமித்த தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக'' என்றாள். அது என்ன? இந்த ஏழை ஸ்திரீ அங்கு தன் கோட்பாடு களுடனும் விக்கிரகங்களுடனும் வாழ்ந்து வந்தாள். ஒரு சமயம், பசியுற்ற அவளுடைய இருதயத்தில் .... எந்த ஒரு உண்மையான விசுவாசியும் தேவன் கிரியை செய்வதைக்காண விரும்புகிறான். அவர் எப்பொழுதாவது தேவனாயிருந்தால்,அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவள் உண்மையான ஒன்றைக்கண்டாள், நடிப்பான ஒன்றையல்ல; உண்மையான ஒன்றை . அவள் மிகுதியான தன் நாட்களில் தேவனை சேவித்தாள். ஏனெனில் உண்மையான ஒன்றை அவள் கண்டாள். 62ஓ, நண்பனே, 'இந்த கோட்பாட்டை சேர்ந்து கொள், முஸ்லீம் மார்க்கத்தை சேர்ந்துகொள், இதற்கு வந்துவிடு; இது அது மற்றதற்கு வந்துவிடு'' என்னும் எத்தனையோ காரியங்களை நாம் கண்டிருக்கிறோம். இத்தகைய உணர்ச்சி வசப்பட்ட காரியங்கள். ஆனால் உண்மையில் உலகமானது உண்மையான ஒன்றைக் காண்பதற்கு இன்றிரவு பசியுற்றிருக்க வேண்டும் - ஏதோ போலியான இரத்தம் வடிதல், கீறல் உண்டாதல், எண்ணெய் தோன்றுதல் போன்ற வேத ஆதாரமற்ற காரியங்களை அல்ல; ஆனால் இக்கடைசி நாட்களில் தமது ஜனங்களில் வாழ்ந்து இத்தகைய செயல்கள் புரிவதாக வாக்களித்துள்ள உண்மையான இயேசு கிறிஸ்துவை ; இந்நாட்களில் நடக்குமென்று வேதவாக் கியங்கள் உரைத்துள்ளவைகளை. 63இந்த கோட்பாடுகள் அனைத்தும். “எங்கள் கோட்பாடுகளை நீங்கள் அறிந்திருப்பீர்களானால் என்கின்றனர். பாருங்கள். நீங்கள் திரு. லூத்தரைபின் நோக்கிப் பார்க்கிறீர்கள். அவர் தன் நாளில் பெரிய மனிதனாகத் திகழ்ந்தார். நிச்சயமாக. இங்குள்ள எழுபத்தைந்து வயது நிரம்பிய ஸ்திரீகள் பதினாறு வயது பெண்களைப் போல் காணப்பட முயன்று, பின்நோக்கி பதினாறு வயது பெண்களைப்போல் உடை உடுத்தி, தங்கள் தலை மயிரைக் கத்தரித்து, குட்டைகால் சட்டை அணிவது போன்று அது உள்ளது. காரோட்டுபவர், பின்னால் உள்ளதைக் காண்பிக்கும் நிலைக்கண் ணாடியின் (rear- View mirror) வழியாக நோக்கி காரோட்டினால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கி விடும். இன்றைய சபையில் காணப்படும் காரியமும் அதுவே, அவர்கள் பின்னால் உள்ளதைக் காண்பிக்கும் நிலைக்கண்ணாடியின் வழியாக நோக்கி, அவர்கள் கடந்துவந்ததைக் காண்கின்றனர். அது நொறுங்கிப்போன நிலையில் உள்ளதில் வியப்பொன்றுமில்லை.பவுல், ''பரம் அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்'' என்றான். திரு. மூடி பெரிய மனிதன் என்று எனக்குத் தெரியும். வெஸ்லி பெரியவர், பெந்தெகொஸ்தே அசைவு, பாப்டிஸ்டு அசைவு அனைத்தும் பெரியவைகளே. ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக நாம் இலக்கை நோக்கித் தொடருவோம். பின்னால் உள்ளதைக் காண்பிக்கும் நிலைக்கண்ணாடியின் வழியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை நோக்க வேண்டாம். இன்றிரவு உள்ளதை நோக்குங்கள். இன்றிரவு வேதவாக்கியங்கள் என்ன வாக்களித்துள்ளன என்பதை நோக்குங்கள். அவர் அதை அந்நாளில் வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஆனால் நாம் அதை கடந்து வந்து இந்நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் முன்னேறிக் கொண்டேயிரு க்கிறோம். 64வெஸ்லி பின்நோக்கி லூத்தர் செய்ததைக் கண்டிருந்தால் எப்படியிருக்கும், பாருங்கள்? லூத்தர் கூறினதை அவர் நோக்கவில்லை, தேவன் கூறினதையே அவர் நோக்கினார். பெந்தெகொஸ்தேயினர் பின் நோக்கி மெதோடிஸ்டுகளைக் கண்டிருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது என்ன நிலையை அவர்கள் அடைந் திருப்பார்கள் என்று காண முடிகிறதா? அதே தான் இன்றும் நடைபெற்றுள்ளது. நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, அது அசைய முடியாதபடிக்கு செய்துவிட்டீர்கள். உங்களால் எங்கும் அசைந்து செல்ல முடியவில்லை. தேவனுடைய ஆவி அதை விட்டுவெளியே வேறெங்கா கிலும் குடியேறுகின்றது. ஒவ்வொரு முறையும் அவர்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களை கொள்ளும்போது, அது மறுபடியும் கோரா எதிர்த்துப் பேசின பாவம் போலாகிவிடுகிறது. தாத்தானும் மற்றவர்களும் எவ்வாறு ஒரு பெரிய கூட்டத்தை தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்க விழைந்தனர் தேவன் மோசேயிடம், அவர்களை விட்டுப் பிரிந்து வா. பூமி பிளந்து அவர்களை விழுங்கும்படி செய்வேன்' என்றார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி நாம் இன்று பிரயாணம் செய்வதற்கு அது முன்னடையாளமாக உள்ளது என்று நாமறிவோம். அவர்கள் அங்கே இருந்தனர். முன் சென்று கொண்டிருந்த, தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த செய்தியை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. எனவே அவர்கள் தாமாகவே ஒன்றை துவங்க வேண்டுமென்று விரும்பினர். அது எப்பொழுதும் அவ்வாறேயுள்ளது. 65இஸ்ரவேல் புரிந்த மிகவும் யோசனையற்ற செயல் , அவர்கள் யாத்திராகமம் 19ல் கிருபையைப் புறக்கணித்து நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டதே. தாத்தான் மோசேயை நோக்கி, “உன்னைத் தவிர இங்கு இன்னும் அநேக தலைவர்கள் இருக்கின்றனர்'' என்று கூறின் போது, மிகவும் பயங்கரமான தவறைப் புரிந்தான். மோசே தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை யென்று உறுதிபடுத்தப்பட்டிருந்தான். அவன் பூமியின் தூளை எடுத்து அதை பேனாக மாற்றினான்.அவன் உரைத்ததெல்லாம் நிறைவேறின.தேவன் அவனோடு கூட இருந்தார். அக்கினி ஸ்தம்பம் அவன் மேல் தொங்கி அவனை உறுதிப்படுத்தினது. இருப்பினும் அவர்கள் வேறோதோ ஒன்றைக் தொடங்க விரும்பினர். அது மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒன்று. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அந்நிலையைத்தான் ஸ்தாபனம் அடைந்துள்ளது. அது உண்மை . ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, நீ உண்மையான ஒன்றைக் காண விரும்புகிறாய் அல்லவா? (சபையோர் 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி). உண்மையான ஒன்று! 66வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பு ஒரு சிறு கதையைக் கூற விரும்புகிறேன். என் தாய். உங்களுக்குத் தெரியும்... அவர்கள் உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் ஒரு செரோக்கி இந்தியர். நான் .... என் இரட்சிப்பு எனக்கு காடுகளின் மேலிருந்த அன்பை எடுத்து விடவில்லை, காடுகள் என்றால் எனக்கு அதிக பிரியம். அங்கு தான் நீங்கள் தேவனைக் காண்கிறீர்கள். காடுகளில் தான் நான் முதலில் தேவனைக் கண்டேன். அங்கு தான் அவர் நம்மைச் சந்திக்கிறார். அங்கு தான் அவர் பேசுகிறார். அங்கு தான் அந்த ஏழு தூதர்கள் சந்தித்தனர். நீங்கள் ஐயன்மீர், இது என்ன சமயம்? என்னும் செய்தியைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? 67அன்றொரு நாள் நானும் சகோ. பார்டர்ஸம் உட்கார்ந்து நின்று கொண்டிருந்த போது, ஒரு சுழல்காற்று வானத்திலிருந்து இறங்கி வந்து, நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சற்று மேலிருந்த பாறையை உடைத்தெறிந்தது. அவர் என்ன கூறினார், பாருங்கள். அங்கு, ஓ, இன்னும் அநேகர் இருந்தனர். சகோ. சாத்மன் இங்கு எங்கோ உள்ளார். டெரியும் அச்சமயம் அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். அங்கு வனாந்தரத்தில் நான் கண்டவை எனக்கு வேட்டையாட அதிக பிரியம். நான் வெளியில் செல்லவே அப்படி செய்கிறேன், மிருகங்களைக் கொல்வதற்காக அல்ல, காடுகளில் தங்குவதற்காகவே. நியூயார்க்கிலுள்ள இல்லை நியூ ஹாம்ப்ஷயரிலுள்ள ஒருவனுடன் நான் வேட்டையாடுவது வழக்கம். அவன் சிறந்த வேட்டைக்காரன். அவன் பெயர் பெர்ட் (Bert). அவன் இங்கிலாந்து நாட்டுக்காரன். அவன் பெற்றோர் முன் காலத்தில் 'ஜெபர்ஸன்நாட்ச்' என்னும் இடத்தை பாறையில் வெட்டினர் - அங்கிருந்து 'காரல் நாட்ச்' வரைக்கும் வெட்டியெடுத்து அதை பிரித்தனர். அவனுடைய உடலில் சிறிது இந்திய இரத்தமும் இருந்தது, நான் கண்டதிலேயே அவன் மிகவும் சிறப்பாக குறிவைத்து கூடுபவன், மிகச் சிறந்த வேட்டைக்காரர் களில் ஒருவன். நீங்கள் அவனுடன் கூடசென்று அவனைத் தேட வேண்டுமெனும் அவசியமேயிராது. அவன் எங்கிருக்கிறான் என்பதை நன்கு அறிந்திருந்தான். வெள்ளை வால் மானைவேட்டையாட எனக்கதிக பிரியம். அவர்கள்... நான் ஒவ்வொரு இலையுதிர் காலத்தின் போதும் சென்று வேட்டையாடுவது வழக்கம். 68அவன் சிறந்த வேட்டைக்காரன், ஆனால் மிகவும் கொடியவன். என் வாழ்க்கையில் அப்படிப்பட்டவனை நான் சந்தித்ததேயில்லை. அவனுக்கு பல்லிக்கு இருப்பது போன்ற கண்கள் இருந்தன- இன்றைய பெண்கள் பல்லியின் கண்களைப்போன்று தங்கள் கண்களை வர்ணம் அடித்துக்கொள்வது போன்ற அத்தகைய கண்கள். அவனுக்கு இயற்கையாகவே அப்படிப்பட்ட கண்கள் இருந்தன. அதுமனித கண்களைப்போல் எனக்குத் தோன்றவில்லை. எனவே அவனைப் பார்க்கவே எனக்கு வெறுப்பாயிருந்தது. அவன் வழுவழுப்பான தோற்றம் உடையவனாயிருந்தான் - அவனுக்கு பக்க பார்வை இருந்தது. அவன் நீசமாயிருப்பதில் பிரியம் கொள்வான். எனக்கு வருத்தம் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே அவன் மான் குட்டிகளைக் கொல்லுவான். அவன், “ஓ, போதகரே, நீரும் மற்றவர்களைப் போலவே இருக்கிறீர். உமக்கு கோழிக்குஞ்சு இருதயம் போல இளகியமனதுள்ளது. நீர் போதகராயிராமல் இருந்தால்,நல்ல வேட்டைக்காரனாயி ருந்திருப்பீர்'' என்பான். நான் அவனிடம்,''பெர்ட், நான் ஆத்துமாக்களை வேட்டையாடுபவன். உன் ஆத்துமா இழந்துபோன நிலையில் உள்ளது'' என்பேன். அவன், ''ஆ,சும்மாயிரும். பில்லி, அப்படிப்பட்ட ஒன்றை என்னிடம் கூற வேண்டாம்' என்பான்.அவன் மான் குட்டிகளை சுட்டுக் கொல்வான். அது எனக்கு வருத்தத்தை விளைவிக்கும். 69சட்டம் மான் குட்டியைக்கொல்லலாம் என்று கூறி யிருக்குமானால், அதைக் கொல்வதனால் தவறொன்று மில்லை. நான் அநேக ஆண்டுகளாகவேட்டை அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். பாருங்கள், ஆபிரகாம் ஒரு கன்றுக்குட்டியைக் கொன்று தேவனுக்கு உண்ணக்கொடுத்தான். எனவே ஒரு மான் குட்டியைக் கொல்வதில் தவறொன்றுமில்லை சட்டம் அதை அனுமதிக்குமானால். ஆனால் அதை சுட்டுவீழ்த்தி விட்டு, அது அங்கேயே கிடக்கும்படி செய்து, அதைக் குறித்து பெருமையடித்துக் கொள்வதென்பது மிகவும் தவறாகும். அப்படி செய்வது தவறு. இங்குள்ள வேட்டையாடும் என் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை கூறினேன். இதைக் கவனியுங்கள். இந்த மனிதன். ஒரு நாள் நான் அங்கு சென்றிருந்தேன், என் மனைவியும் என் கூட வந்திருந்தாள். அவன் மான்குட்டி அழுவது போல சத்தமுண்டாக்கும் ஒரு ஊதலை செய்து கொண்டுவந்திருந்தான் மான்குட்டி அழும்போது அது எப்படி வினோதமான சத்தம் உண்டாக்குமென்று உங்களுக்குத் தெரியும். 70நான் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் நேரத்தோடு வேட்டைக்குச் செல்லவில்லை, ஒரு கூட்டத்திலிருந்தேன். அதன் பிறகு வேட்டையாட அவனுடன் நான் மலையின்மேல் சென்றேன். ஏற்கனவே அதிகமாக வேட்டையாடுதல் நடந்து கொண்டிருந்தது. அங்கு முதன் முறையாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கும்போது, அந்த வெள்ளை வால் மான்கள்...நீங்கள் ஹவுடினி மிருகங்களை மறைத்துவிடும் ஒரு பெரிய ஜாலவித்தைக்காரன் என்று கருதலாம். ஆனால் அவைகளுக்கு அவன் ஒரு கற்றுக்குட்டியே. முதலாவதாக என்ன நடக்குமென்றால், அவையெல்லாம் போய் ஒளிந்து கொள்ளும். நிலாவெளிச்சம் இருந்தால், அவை இரவில் புல்மேயும்; அல்லது ஒரு புதரின் மறைவில் இருந்து கொண்டு அசையாமல் இருக்கும். அன்று நான் அவனிடம், “பெர்ட், நீ அந்த ஊதலை உபயோகிக்கக் கூடாது'' என்றேன். அவன், 'ஆ, போதகரே, நீர் மிகுந்த இளகியமனது கொண்டவர். பேசாமலிரும்'' என்றான். 71நாங்கள் புறப்பட்டு சென்றோம். எங்கள் சட்டையில் சில 'சான்ட்விச்சுகளை போட்டுக் கொண்டோம். நாங்கள் பகல் நேரம் வரைக்கும் வேட்டையாடுவதென்றும், 'பிரஸிடென்ஸியல் ரேஞ்ஜ்' மலையுச்சி வரைசென்ற அதன் பின்பு பிரிந்து கீழே வருவதென்றும் முடிவு செய்தோம். எங்களுக்கு ஒரு மான் கிடைத்தால், அது எங்கிருக்குமென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஓரிரண்டு நாட்களில்அதை இழுத்துக் கொண்டுவந்து அதை தொங்கவிடுவோம் என்று எண்ணினோம். அங்கு நான்கு அல்லது ஆறு அங்குலம் உயரத்துக்கு பனி இருந்தது. பாதையில் நடந்து செல்வதற்கு அது நல்ல நேரமாயிருந்தது. நாங்கள் புறப்பட்டு மலையின் மேல் ஏறினோம். ஒரு பாதையும் கூட தென்படவில்லை. இரவில் நிலா பிரகாசித்துக் கொண்டிருந்தது. மான்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). 72பெர்ட் எனக்கு முன்னால் சென்று வழி காண்பித்துக் கொண்டிருந்தான். நான் அவனுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தேன். அவன் இப்படி சற்று உட்கார்ந்தான். பனி உலர்ந்திருந்தது. அவன் பின் பாக்கெட்டில்கை போட்டான். அவன் 'சான்ட்விச் தின்னப்போகிறான். அதன் பிறகு நாங்கள் பிரிந்து போகப்போகிறோம் என்று எண்ணினேன். ஏனெனில் நாங்கள் மலை உச்சியை அடைந்திருந்தோம்.அவன் இங்கு தன் கையை போட்டான். நான் என் 'சான்ட்விச்சை வெளியே எடுக்கத் தொடங்கி, என் துப்பாக்கியை வைக்க ஒரு இடம்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் 'சான்ட்விச்சை வெளியே எடுத்து, சுற்றும் முற்றும் பார்த்தேன்.அவன் அந்த ஊதலை வேளியே எடுத்தான். ''அதுமிகவும் கேவலமான தந்திரம்' என்று எண்ணினேன். அவன் அந்த ஊதலை எடுத்து, தன் பல்லிக் கண்களினால் என்னை நோக்கினான். அவன் ஊதலை இப்படி வாயில் வைத்தான். நான். ''பெர்ட், இப்படிப்பட்ட காரியத்தை செய்யமாட்டாயென்று நினைக்கிறேன். செய்வாயா?'' என்று கேட்டேன். 73அவன், 'ஓ' என்று கூறி விட்டு, அதை ஊதினான். நான் இருந்த இடத்திலிருந்து ஐம்பது கெஜம் தூரத்தில், ஒரு பெரிய பெண் மான் நிற்பதைக்கண்டு நான் வியப்புற்றேன். அந்த பெண்மான் ஒரு தாய் மான். அது பெரிய பழுப்பு கண்களுடனும், காதுகளை தூக்கிக் கொண்டும் அங்கு நின்று கொண்டிருந்தது. பாருங்கள், அது ஊதல் சத்தத்தை கேட்டது. அது தாயானபடியால், தன் குட்டி அழுகிறது என்று நினைத்துக் கொண்டது. மற்ற மான்கள் வெளியே வந்தாலும் வராமற் போனாலும், அதற்குள் இருந்த ஏதோ ஒன்று அதை வெளியே இழுத்தது. அது ஒரு தாய். பெர்ட் இப்படி பார்த்தான், அவன் மறுபடியுமாக ஊதலை மெதுவாக ஊதினான். அந்த மான் வெளிப்புறத்தில் நடந்து வந்தது. அப்படி நடந்துவருவது வழக்கத்துக்கு மிகவும் மாறான ஒரு செயலாகும். அது தன் பெரிய தலையை உயர்த்தினது. அதன் கண்கள் சுற்றுமுற்று பார்த்தன. 74சிறிது கழிந்து வேட்டைக்காரன் கையை நீட்டி துப்பாக்கியை எடுத்தபோது, அது வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டது. வழக்கமாக அந்நிலையில் மான்கள் துள்ளி வேகமாக ஓடிவிடும், ஆனால் இதுவோ சிறிதும் அசையவில்லை. அது அங்கு நின்றுகொண்டு, தன் தலையைத் திருப்பி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. என்னே “பெர்ட், நீ அப்படிசெய்யக் கூடாது'' என்று நான் எண்ணினேன். பாருங்கள், அது ஒன்றும் வேஷம் போடவில்லை. அது மாய்மாலமாக ஒன்றும் செய்யவில்லை. அது நடிக்கவில்லை. அந்த பாசம் அவளுக்குள் பிறந்திருந்தது. அது ஒரு தாய். அதன் குட்டி ஆபத்தில் சிக்கியுள்ளது. எனவே தன் உயிருக்கு ஆபத்து நேரிட்டாலும் ஒரு கவலையுமில்லை என்ற எண்ணத்துடன் அது குட்டியை தேடிக்கொண்டிருந்தது. தாய் என்னும் முறையில் அதற்குள் ஒரு உணர்ச்சி இருந்தது. அது வேட்டைக்காரனைக் கண்டது. ஆனால் அதன் சிந்தையோ வேட்டைக்காரனைக் குறித்து அல்ல, அது ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த மான் குட்டியின்மேல் இருந்தது. 75அவன் முப்பது 30.06 ஆறு துப்பாக்கியின் பாதுகாப்பை கீழே இழுத்தான். ஓ, அவன் குறி தவறாதவன். அவன் துப்பாக்கியை மட்டப்படுத்தினான். நான் என் தலையை திருப்பிக்கொண்டேன். அதைக் காண எனக்கு சகிக்கவில்லை. அவனை என்னால் காண முடிய வில்லை. இன்னும் இரண்டு நிமிடங்களில் அவன் அதன் உத்தமமான இருதயத்தை சுட்டு பிளந்துவிடுவான். அது தன் குட்டி ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளது என்று எண்ணி அதைக்கண்டு பிடிக்க, வேட்டைக்காரன் புதரில் பதுங்கியிருக்கிறான் . என்று அறிந்தும் கூட, வெளிவந்துள்ளது'' என்று எண்ணினேன். அவன் அந்த நூற்று எண்பது கிரேயின் (grain) எடை கொண்ட தோட்டாவினால் அதன் உத்தமமான இருதயத்தைப் பிளந்து விடுவான். அவன் குறி தவறாதவன். அவன் துப்பாக்கியை மட்டப்படுத்தினான். அதை காண எனக்கு சகிக்காது என்று எண்ணி, நான் திரும்பிக் கொண்டேன். நான், “கர்த்தாவே, அவன் அப்படி செய்யாதபடிக்கு அவனுக்குதவி செய்யும்'' என்று ஜெபித்தேன். நான் மிகவும் வருத்தப்பட்டேன். அந்த ஏழை தாய் தன் குட்டியைத் தேடி அங்கு நின்று கொண்டிருக்கிறது. அது வேஷம் போடவில்லையென்று எனக்கு நன்றாகத் தெரியும். அது ஒரு தாய். மற்ற நேரத்தில் அது ஓடிவிட்டிருக்கும். ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று இருந்தது. 76நான் காத்து, காத்து பார்த்தேன். ஆனால் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவேயில்லை என்ன நேர்ந்தது?'' என்று நான் வியந்தேன். நான் காத்திருந்து, மெதுவாக திரும்பிப் பார்த்தேன். அந்த மான் அங்கு நின்றுகொண்டு, அவனையே உற்று நோக்குவதை நான் கண்டேன். நான் துப்பாக்கி குழாயைபார்த்தபோது, அது இப்படி போய்க் கொண்டிருந்தது. அவன் அவன் குறிவைக்கமுயன்று கொண்டிருந்தான், அவனால் முடியவில்லை . அவன் துப்பாக்கியை கீழே போட்டு என்னைப் பார்த்தான். அவனுடைய பெரிய கண்கள் மாறியிருந்தன. அவனுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவன் என் கால் சட்டையின்கால் பாகத்தைப் பிடித்துக்கொண்டு, 'பில்லி, நீர் பேசிக் கொண்டிருக்கும் இயேசுவிடம் என்னை வழி நடத்தும்'' என்று கெஞ்சினான். 77அது என்ன? அவன் உண்மையான ஒன்றைக் கண்டான். பாருங்கள்? அந்த தாய்மான் தான் கொண்டிருந்த உண்மையான பாசத்தைக் காண்பித்தது. அது அங்கிருந்த கொடிய வேட்டைக்காரனையும் அசைத்துவிட்டது. நான் கண்டதிலேயே மிகக்கொடூர இருதயம் படைத்தவன் அவன், அது நான் பிரசங்கித்த பிரசங்கத்தின் மூலம் அல்ல. அது அவன் கண்ட உண்மையான ஒன்றின் விளைவாகும். அது உத்தமமான ஒரு தாய் தன் குட்டியைத் தேடுவதாகும், அது அவனை கிறிஸ்துவினிடம் வழி நடத்தினது. இப்பொழுது அவன் எங்கள் சபையில் ஒரு 'டீக்கன்னாக இருக்கிறான். அவன் மிகவும் அருமையான கிறிஸ்தவனாக மாறிவிட்டான். ஏனெனில் வேஷம் போடப்படாத ஒன்றை அவன் கண்டான். அது பாவனை விசுவாசம் அல்ல. அது உண்மையானது. 78ஓ, சகோதரனே, சகோதரியே, இன்றிரவு இந்த சபை, இந்த ஜனங்கள், நீங்களும் நானும்! உண்மையான ஒன்று உள்ளது. அது வேஷம் போடப்பட்டது அல்ல, சிலர் வேஷம் போடுவதை நீங்கள் காணலாம், ஆனால் உண்மையான ஒன்றுண்டு. மனிதனிலுள்ள ஏதோ ஒன்று, அவன் தேவனுக்காக வாழும்படி செய்கிறது, சகோதரனே, இன்றிரவு வேஷம் போடாத உண்மையான பரிசுத்த ஆவி உள்ளது. அது உண்மையானது. இங்குள்ள எத்தனைபேர் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக, கிறிஸ்துவுக்கு உத்தமமுள்ளவர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? மரணம், உபத்திரவம், வேறு என்ன நேரிட்டபோதிலும், அந்த மான் தாயாக இருந்தது போல், நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் அப்படி இருக்க விருப்பங்கொள்கின்றீர்கள் அல்லவா? எனக்கு அப்படிப்பட்ட கிறிஸ்தவனாக இருக்க விருப்பமுண்டு சென்ற இரவு நாம் தியானித்த அந்த சீரோபோனிக்கியா ஸ்திரீயைப் போல், அப்படிப்பட்ட கிறிஸ்தவனாக இருக்க. இன்றிரவு நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த ராஜஸ்திரீ அப்படிப்பட்ட கிறிஸ்தவளாக இருந்தாள். அவள் உண்மையான ஒன்றைக் கண்டபோது, ஆயத்தமானாள். நாமும் இன்றிரவு உண்மையான ஒன்றை - கிறிஸ்துவை - ஏற்றுக்கொள்ள தேவன் நமக்குதவி செய்வாராக! நாம் சிறிது நேரம் நமதுதலைகளை வணங்கி ஜெபிப்போம். 79இன்றிரவு இக்கட்டிடத்தில் யாராகிலும்... நீங்கள் அமைதியாக இருக்கும் இந்நேரத்தில், யாராகிலும் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக அறியாமலிருந்து, அவரை சொந்த இரட்சகராக அறிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கரங்களையுயர்த்து வீர்களா? ஒன்று, இரண்டு, மூன்று. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! இன்றிரவு இங்குயாராகிலும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோரிக்கொண்டு, ஒரு அருமையான சபையின் அங்கத்தினராக, ஒரு பெரிய கூட்டம் ஜனங்களைச் சேர்ந்து கொண்ட, அதே சமயத்தில்உங்கள் இருதயத்தின் ஆழத்தில், கிறிஸ்தவ மார்க்கத்தைக் கொண்டிராமல், அதனுள் பிறக்கவில்லையென்று அறிந்திருக்கக் கூடும். அந்த மான் தாயாக இருந்தது போல், தாயாக இருக்கப்பிறந்தது போல், அவள் முழுக்க முழுக்க தாயாக இருந்தாள். அந்தத் தாய் மான் தாயாக இருந்ததுபோல், நீங்களும் உண்மையான கிறிஸ்தவராக வேண்டுமென்று விரும்பினால், உங்கள் கரங்களையுயர்த்தி, 'சகோ.பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்' என்று சொல்வீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக ! சுற்றிலும் எல்லாவிடங்களிலும், மேலேயுள்ள தாழ்வாரத்திலும், உங்கள் கரங்களைக் காண்கிறேன். 80பரலோகப் பிதாவே, நான் நினைக்கவேயில்லை, அந்த குளிர் மிகுந்த நவம்பர் நாளில், பனி என் கழுத்து மேலெல்லாம் பெய்து, நான் ஈரமடைந்து அங்கு நின்று கொண்டிருந்த போது, அந்த மனிதன் அங்கு படுத்துக்கொண்டிருந்தான். நான் எவ்வளவாக அவனுடன் பேசி, அவன் கரத்தைப் பிடித்துக்கொண்டு, அவனைக் கெஞ்சி, அவனிடம் வேதத்தைக் குறித்து பேசின போது, அவன், ''ஓ, நீர் கூறுவது ஒருக்கால் சரியாயிருக்கலாம்'' என்று கூறிவிட்டான். ஆனால் நீர் இயற்கையிலிருந்து உண்யைான ஒன்றை அனுப்பினதை அவன் கண்டபோது, அதில் ஏதோ உண்மையான ஒன்றுள்ளது என்பதை அவன் காணாமலிருக்க முடியவில்லை. இப்பொழுது, கர்த்தாவே, அவன் உம்முடைய தாசனாக இருக்கிறான். இப்பொழுதும் இன்றிரவு அநேகர் உள்ளனர். பிதாவே, அவர்களில் சிலர், தாங்கள் கிறிஸ்தவர்களாக இல்லை என்பதன் அறிகுறியாகதங்கள் கரங்களையுயர்த்தினர். அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆக வேண்டுமென்று விரும்புகின்றனர், தேவனே, அவர்கள் ஏதோ ஒரு சபையை சேர்ந்து கொண்டு ஏதோ ஒரு முறைமையை, ஒரு கோட்பாட்டை, ஒரு ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்க அனுமதிக்க வேண்டாம். கிறிஸ்துவே, அது அவர்களுடைய இருதயத்தில் பிறக்கட்டும். 81சபையைச் சேர்ந்து கொண்டிருப்பவர்கள், நாங்கள் இந்நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த ராஜஸ்திரீயைப் போல் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவள் ஏதோ ஒன்றுக்காக பசியுற்றிருந்தாள். கர்த்தாவே, இவர்களும் கூட அவ்வாறிருக்கின்றனர். அவள் தேவனை மானிடரில் அடையாளம் காண்பிக்கும் உண்மையான ஒன்றைக் கண்டபோது, ஆயத்தமானாள், அவள், இஸ்ரவேலின் தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக'' என்றாள். அதன் பின்பு அவள் அஞ்ஞான முறைமைகளுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. பிதாவே, இன்றிரவு இங்குள்ள அநேகர் அந்நிலையில் உள்ளனர் என்பதில் ஐயமில்லை. அவர்கள் மாத்திரம் உண்மையான ஒன்றைக் காண முடியுமானால் இவ்வுலகில் நீர் இருந்தபோது, இந்நாளில் என்ன நடக்குமென்று நீர்எங்களுக்கு உரைத்திருக்கிறீர். நீர் நேற்றும் இன்றும்என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. நீர் எவ்வாறு உம்மை அடையாளம் காண்பித்தீர் என்றும், பரிசேயர் அதைக் காணத் தவறினர் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, இன்றைக்கு அதே குழுக்கள், ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, சில கோட்பாடுகளை பெற்றவர்களாய், அதை காணத் தவறுகின்றனர். மேசியா மகத்தான பரிசுத்தஆவி தம்மை ஜனங்களிடம் அடையாளம் காண்பிப்பதை அவர்கள் காணத் தவறுகின்றனர். அவர் அவ்வாறு செய்வாரென்று நீர்வாக்களித்திருக்கிறீர். 82கர்த்தாவே, இவர்கள் ஒவ்வொருவரும் இன்றிரவு உம்முடைய பிரசன்னத்தை உணரவும் காணவும் அருள்புரிவீராக. சாலொமோனிலும் பெரியவர் இன்றிரவு இங்கே இருக்கிறார்'' என்னும் அந்த பொருள் அவர்கள் இருதயத்தில் பதிவதாக. அது உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே. அவர் வந்து, ஜனங்களை மாற்றி, அவர்களுடைய இருதயங்களை புதிதாக்கி, தேவனில் மறுபடியும் பிறந்த அனுபவத்தைத் தருவதற்கு ஆயத்தமாயுள்ளார். அந்தத் தாய் பெண்மான், தேவனுடைய கிருபையினால் ஒரு பாசமுள்ள தாயாக இருக்க தெரிந்து கொள்ளப்பட்டது. அது அதனால் உண்டானதல்ல. அது போல் நாங்களும் உலகத்தோற்றத்துக்கு முன்பே தெரிந்து கொள்ளப்பட்டோமென்று நீர் எங்களிடம் கூறியுள்ளீர். தேவனே, அந்த ராஜஸ்திரீக்கு இருந்தது போல் தங்கள் இருதயத்தில் அந்த இழுப்பை பெற்றுள்ள ஒவ்வொருவரும் தேவனைக் காணும்படியாகவும், இன்றிரவு உண்மையான ஒன்று நடக்கவும், அவர்கள் அதைக்கண்டு அவரைச் சேவிக்கவும் அருள் புரிவீராக. ஏனெனில் ''சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 83இப்பொழுது பயபக்தியாக, அமைதியாக நாம் பீடத்துக்கு வருவதற்கு முன்பு, தயவு செய்து யாரும் நகர வேண்டாம். சிறிது நேரம் உண்மையாக பயபக்தியா யிருங்கள். இது பயபக்தியான ஒருநேரம். தீர்மானங்கள் இப்பொழுது செய்யப்படுகின்றன. அநேகர் கரங்களை யுயர்த்தினர். நீங்கள் மிகவும் உத்தமமாக அப்படி செய்து அறிக்கையிட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் வேதாகமத்தைக்குறித்து கேள்விப்பட்டிருக்கி றீர்கள், இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர் தேவனுடைய குமாரன் என்று கேள்விப்பட்டிருக்கி றீர்கள். அவர் உயிரோடெழுந்தாரென்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரென்றும் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். 84நாம் பேசிக்கொண்டிருக்கும் பரிசுத்த ஆவி இயேசு கிறிஸ்துவா? நிச்சயமாக. அப்படித்தான். பாருங்கள், அவர் தேவன்; தேனாகிய பரிசுத்த ஆவி என்று அறியப்படுகிறார், அது வெறொரு தேவன் அல்ல; அது அதே தேவன். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று தெய்வங்கள் அல்ல. அது ஒரே தேவனின் மூன்று தன்மைகள் (attributes), பாருங்கள், ஒரே தேவனின் மூன்று உருவங்கள். பாருங்கள், வேறு விதமாகக் கூறினால், மூன்று உத்தியோகங்கள். உங்களுக்கு தெரியும், அவர் பிதாவின் உத்தியோகத்தை செய்தார், பிறகு குமாரனாக, அது தொட முடியாத தேவன் (அந்த மலையைக்கூட தொடுபவன் எவனும் மரிக்க வேண்டும்), நாம் மாம்சத்தில் அவரைத் தொடுவதற்கென தம்மைத் தாழ்த்துதலாம். இப்பொழுது அவர் உங்களுக்குள் இருக்கிறார். அவர் உங்களுக்குள் வாசம்செய்ய தம்முடைய இரத்தத்தினால் உங்களைப் பரிசுத்தமாக்கினார். “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? அது தேவன் நம்மேலும், நம்மோடும், நமக்குள்ளும் இருத்தல். பாருங்கள்? 85அது இன்றிரவு அந்த பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவே. அவர் மாறாதவர். நீங்கள்....அவர் திராட்சச் செடி, நீங்கள் கொடிகள். அவர்மேல் விசுவாசமாயிருங்கள். இன்றிரவு அவர் நமது மத்தியில்இருப்பதாக தம்மை அடையாளம் காண்பிப்பாரானால்... அவர் வடுக்களோடு இங்கு நிற்பாரானால். அது ஒரு மனிதன், மாம்ச சரீரம். அதை யாருமே ஆள்மாறாட்டம் செய்ய முடியும். ஒரு மனிதன் தன்னை உருக்குலைத்துக் கொள்ள முடியும். காண்பதற்கு இயேசு எப்படியாயிருந்தா ரென்று நமக்குத் தெரியாது. ஓவியர்கள், அவர் காண்பதற்கு எப்படியிருந்தார் என்று கொண்டிருந்த கருத்துக்களையே நாமறிவோம் அவர்கள் மனதில் எழுந்த கற்பனை. ஹாஃப்மானுக்கு ஒருவிதமான கருத்து இருந்தது, சால்மானுக்கு வேறு விதமான கருத்து, இன்னும் அநேகர் ஆனால் நீங்கள் அவரை எப்படி அறிந்து கொள்வீர்கள்? அவருடைய ஜீவனின் மூலம். ஒரு மனிதன், கைகளில் ஆணிகடாவப்பட்ட காயங்களுடன் இங்கு நிற்பானானால், அவன் ஆள்மாறாட்டம் செய்பவன். ஏனெனில் இயேசு வரும்போது, கண்கள் யாவும் அவரைக் காணும், முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும், நாவுகள் யாவும் அவரை அறிக்கை பண்ணும். நிச்சயமாக. 86ஆனால் அவருடைய ஆவி இங்குள்ளது, பாருங்கள். நாம் மாத்திரம் நம்முடைய சிந்தைகளை அவருடைய சிந்தைக்குள் செல்லவிட்டுக் கொடுப்போமானால் ''கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது. அவர் வார்த்தையாயிருக்கிறார். அவரை “தேவனுடைய வார்த்தை'' யென்று வேதம் குறிப்பிடுகிறது. இயேசு வார்த்தையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? வேதத்தில், எபிரேயர் 4ம் அதிகாரத்தில், ”தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும். இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது. அதுதான் சாலொமோனுக்குள் இருந்தது வார்த்தை தேவன் அதனால் தான் அவனால் அவர்களுடைய சிந்தையிலிருந்த இரகசியங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அது இயேசுவுக்குள்ளும் இருந்தது, பாருங்கள். அதுவே இப்பொழுது இங்கும் உள்ளது. அங்குள்ளவர்களாகிய நீங்கள்; நான் ஜெபவரிசயை அழைக்கப் போகிறதில்லை. ஏனெனில் நான் பீடஅழைப்பு கொடுக்கப்போகிறேன். இந்த கூட்டங்களில் ஒன்றுக்காகிலும் வராத சிலர் இங்கிருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த ஒருவரையும் இக்கட்டிடத்தில் நான் காணவில்லை. 87நேற்று இரவு முப்பதுக்கும் அதிகமானவர் அழைக்கப் பட்டதாக ஒருவர் என்னிடம் கூறினார். ஒருமுறை ஒரு ஸ்திரீஅவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அதே காரியம் இப்பொழுது நிகழ்கின்றது, தேவனுடைய குமாரனாகிய அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு சென்றது, அவர், ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்'' என்று கூறியுள்ளார். இப்பொழுது இங்கு சுற்றிலும் இருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள், விசுவாசமா யிருங்கள் கட்டில்களிலும், டோலிகளிலும், எங்கிருந்தாலும், விசுவாசியுங்கள்! நீங்கள் நம்பிக்கை இழந்தவர்கள் என்று எண்ண வேண்டாம். 88என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியுமானால், நான் செய்வேன். ஆனால் என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியாது. என் கரத்தை உங்கள் மேல்வைக்க முடியும். அட்டைகள் வைத்துள்ள ஒவ்வொருவர் மேலும் நான் அவ்வாறு செய்ய எண்ணம் கொண்டுள்ளேன். அவர்கள் ஒவ்வொரு நாளும் அட்டைகளை விநியோகிக்கின்றனர். என் கையை உங்கள் மேல்வைக்க எண்ணங்கொண்டு ள்ளேன். ஆனால் அது நானும் உங்களுடன் சேர்ந்து விசுவாசிக்கிறேன் என்பதைக் காண்பிக்கவே. கவனியுங்கள், நீங்கள் ஏன் அவரைத் தொடக் கூடாது?வேதாகமம், “நமது பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக'' அவர் இப்பொழுது இருக்கிறார் என்று கூறுகிறது. அது சரியா? சரி, அவர் பிரதானஆசாரியர் என்றால், அவர் முன்பு கிரியை செய்த விதமாகவே இப்பொழுதும் நிச்சயமாக கிரியை செய்வார். அப்படி செய்வார் அல்லவா? அவர் நிச்சயமாக முன்பு கிரியை செய்த விதமாகவே இப்பொழுதும் கிரியை செய்வார். சரி,இப்பொழுது அவரை விசுவாசத்தினால் தொடுங்கள். 89இப்பொழுதும் பரலோகப் பிதாவே, இக்கூட்டம் உம்முடையது. இந்த ஸ்திரீ சாலொமோனின் மேல் சிந்தனைகளைப் பகுத்தறியும் ஆவி தங்கியிருப்பதைக் கண்டபோது, உண்மையான ஒன்றைக் கண்டாள் என்று இன்றிரவு நான் கற்பித்தேன், கர்த்தாவே, உம்முடைய வார்த்தைகள் உண்மையுள்ளவை என்று நாங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். சோதோமின் நாட்களில் நடந்தது போல, உம்முடைய வருகைக்கு முன்பு அது திரும்பவும் வருமென்றும், நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்றும், நீர் செய்த கிரியைகளை நாங்களும் செய்வோமென்றும் உரைத்திருக்கிறீர். எங்கள் பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியராக இன்றிரவு நீர் இருக்கிறீர். இதைக் காட்டிலும் எங்களுக்கு இன்னும் என்ன தேவை? அவர் தீர்க்கதரிசி என்று அறிந்துகொள்ள, யூதர்களுக்கு இன்னும் என்ன தேவைப்பட்டது? ஒரு கன்னிகை கர்ப்ப வதியானாள், இன்னும் அநேக காரியங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், அவர்களுடைய கோட்பாடுகள் அவர்களைக் குருடாக்கிப்போட்டன. கர்த்தாவே, இங்குள்ள சிலர், சேபாவிலிருந்து வராமலிருக்கலாம், ஆனால் அவர்கள் அநேக இடங்களிலிருந்து இங்கு வந்துள்ளனர். தேவனே இன்றிரவு உம்மை உண்மையாக அடையாளம் காண்பிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அதன் பிறகு, அன்றொரு நாள் அந்த மானிலிருந்த தாய் உணர்ச்சி செய்ததுபோல், அவர்களில் உம்மை அடையாளம் காண்பியும். பிதாவே, நாங்கள் உம்முடையவர்கள். எங்கள் மூலம் பேசுவீராக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 90சுற்றிலும் எல்லாவிடங்களிலுமுள்ள நீங்கள் ஒவ்வொரு வரும், விசுவாசம் கொண்டவர்களாய் விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபியுங்கள்.... அவரை நோக்கி இப்பொழுது ஜெபியுங்கள், விசுவாசியுங்கள். ஒருக்கால் இப்படி செய்ய பரிசுத்த ஆவியானவர் விரும்பாமல் இருக்கலாம். அவர் விரும்பாமல் போனால், நான் ஜெப வரிசையை அழைப்பேன். அங்கு நின்று கொண்டிருங்கள், வெளியிலுள்ள சிலரும் கூட - உங்களிடம் ஜெப அட்டை இல்லாமற்போனாலும்.... ஜெப அட்டை வைத்திருப்போர் மாத்திரமல்ல. எவராகிலும் சரி, ஜெபித்துக் கொண்டிருங்கள். எனக்குத் தெரியாது, நீங்கள் ஜெபம் செய்துபாருங்கள். ''கர்த்தராகிய இயேசுவே, அவருக்கு என்னை தெரியாது என்று எனக்குத் தெரியும். அவருக்கு என்னைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால் நான் விசுவாசிக்கிறேன் என்று மாத்திரம் அறிவேன்'' என்று கூறுங்கள். 91உங்கள் விசுவாசம் நீங்கள் அறியாமலே எழும். நீங்கள் நெருக்கவோ குதிக்கவோ செய்யாதீர்கள். அப்படி செய்தால், நீங்கள் அதனின்று அகன்று விடுகின்றீர்கள். அது உங்களோடே இருக்கின்றது. நீங்கள் அமைதியாயிருந்து விசுவாசியுங்கள்.இப்பொழுது விசுவாசியுங்கள், விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். (சபையிலுள்ள ஒரு சகோதரன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் - ஆசி). ஆமென். பயபக்தியாயிருங்கள், விசுவாசம் கொண்டிருங்கள், விசுவாசியுங்கள். சில சமயங்களில் உங்கள் விசுவாசம் நீங்கள் அறியாத நிலையிலே இருக்கும், அது உங்களிடம் உள்ளதை நீங்களே அறியாமலிருக்கக் கூடும். அந்த ஸ்திரீக்கு விசுவாசம் இருந்தது, ஆனால் அவள் அதை அறியவில்லை. 92உங்களில் எத்தனை பேர் அந்த கர்த்தருடைய தூதனின் படத்தைக் கண்டிருக்கிறீர்கள் - அந்த ஒளியை? அது இங்கு டெக்ஸாஸில்தான் எடுக்கப்பட்டது. இப்பொது அது உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஐயா, நீர் என்ன நினைக்கிறீர்? மூலையில் உட்கார்ந்து கொண்டிருப்பவரே, நீர் விசுவாசிக்கிறீரா? நீர் ஆவலாய் நோக்கிக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று. உமது உடலில் அநேக கோளாறுகள் உள்ளன. உமக்கு அநேக சிக்கல்கள் உள்ளன. அதை நான் கூறினபோது, உமக்கு ஒரு வினோதமான உணர்ச்சி ஏற்பட்டது. இல்லையா? அது உண்மையானால், உமது கையையுயர்த்தும், நான் உமக்கு முழுவதும் அந்நியன். எனக்கு உம்மைத் தெரியாது. அது உண்மை . என்ன தெரியுமா? அந்த ஒளி உமக்கு மேலே வந்து நின்றது. பாருங்கள்? ஆகையால் தான் உமக்கு ஒரு இனிய உணர்ச்சி உண்டானது. அது கீழே இறங்கி வந்ததை நான் கவனித்தேன். 93ஆம், நீர் இங்கிருக்கிறீர், நீர் கட்டிடத்தை விட்டு போவதற்கு முன்பு ஜெபித்துக்கொள்ள விரும்புகிறீர். நீர் அங்கு உட்கார்ந்து கொண்டு, நான் இங்கு நின்று கொண்டுள்ள இந்நிலையில், உமது கோளாறு என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்து வாரானால், அது தேவன் என்று நீர்விசுவாசிப்பீரா? அது குடல் இறக்கம் (hernia) - உமக்குள்ள பெரிய கோளாறுகளில் ஒன்று. அது உண்மை . அது சரியா? நீர் யாரென்று, உமது பெயர் என்னவென்று, தேவன் என்னிடம் கூறுவாரானால்- இப்பொழுது நீர் அவருடன் நல்ல தொடர்பு கொண்டிருக்கிறீர் - நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீரா? என்னை மன்னிக்கவும். அது பலருக்கு இடறலாயுள்ளது, பாருங்கள். நீர் அதை விசுவாசிக்கிறீரா?உமது பெயர் திரு. ஸ்டர்க். அது சரியென்றால், உமது கையையுயர்த்தும். விசுவாசித்து சுகம் பெறுவீராக. 94இங்கு கறுத்த தலையுடைய பெண் ஒருத்தி பின்னால் உட்பாதையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆம், நீ தான். அது கூறப்பட்ட போது, நீ திகைத்துப்போனாய். இந்த நேரத்தில் ஒரு வினோதமான , உன்னைச் சுற்றிலும் ஒரு இனிமையான உணர்ச்சி உனக்கு ஏற்பட்டுள்ளது. நீங்கள் யாராகிலும் அதை பார்த்தால், உங்களால் அதை காண முடியுமானால், அது அந்த பெண்ணின் மேல் வந்துள்ள சொகுசா (amber) நிறம் கொண்ட ஒளி. அவளுடைய கோளாறு என்னவெனில், அவளுக்கு தலைவலி உண்டாகி, அவளை அதிகம் தொந்தரவுபடுத்துகிறது. அது உண்மை, அது உண்மை யானால், இப்படி உன் கையையுயர்த்து. என் வாழ்க்கை யில் அவளை நான் கண்டதில்லை. அது உண்மை. தலைவலி அவளைத் தொந்தரவு செய்கின்றது - ஒற்றை தலை வலியைப்போன்று. ஆனால் அது உன்னைவிட்டுப் போய் விடும். ஆமென். அதை விசுவாசி. உனக்கு பக்கத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டு, என்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அந்த ஒளி அவர்மேல் நகர்ந்து கொண்டிரு க்கிறது, அந்த மனிதனுக்கு கண்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் விசுவாசிப்பாரானால், தேவன் கண்களை சுகப்படுத்தி அவைகளை சரியாக்கி விடுவார். நீர் விசுவாசிக்கிறீரா? உம்மை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. நீர் எனக்கு அந்நியர். 95உமக்கு அடுத்தபடியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த வாலிபன், தலையில் ஏற்பட்டுள்ள கோளாறினால் அவதியுறுகிறான். அது உண்மை. அது உண்மை. அந்த மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. தேவன் அதை அறிவார், பாருங்கள். சரி, நீ விசுவாசி. உனக்கு பக்கத்தில் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு, இந்த பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மனிதன். ஆம், நீ மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறாய், ஆனால்அதுவல்ல உன் கோளாறு, உனக்கு முதுகில் ஏதோ கோளாறு உள்ளது. அதற்காக உனக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட விரும்புகிறாய். அது உண்மையானால், உன் கையை ஆட்டு. சரி. உனக்கு அடுத்தபடியாக அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த வாலிபன். அந்த வாலிபனுக்கு நிறைய தொல்லைகள் இருந்து வருகின்றன - அந்த வாலிபனுக்கு, ஆம், ஐயா. சிகப்பு கழுத்தணி (tie) அணிந்துள்ளவரே, உமக்கு குடும்பத்தில் நிறைய தொல்லைகள் ஏற்பட்டுள்ளன. உமது மனைவிக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளது, உமக்கும் தலையில் ஒருவித அழுத்தத்தினால் அவதி உண்டாகின்றது. அது கர்த்தர் உரைக்கிறதாவது, அது உண்மை . விசுவாசியும், சந்தேகப்படாமல் விசுவாசியும். 96பின்னால் ஒரு ஸ்திரீ உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். அந்த ஒளி பின்னால் நகர்ந்து சென்று அங்கே நிற்பதை உங்களால் காண முடியவில்லையா? அவளுக்கு கண்ணிலும், மூத்திரப் பையிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓ, அவள் அதை இழக்கப் போகிறாள். தேவனாகிய கர்த்தாவே, எனக்குதவி செய்யும். அவளுடைய பெயர் திருமதி சேம்பர்ஸ் , உன் முழு இருதயத்தோடும் விசுவாசி, திருமதி சேம்பர்ஸ். எழுந்து நில். நீ யாரென்று ஜனங்கள் காண எழுந்து நில். நான் அந்நியன், அவளை என் வாழ்க்கையில் கண்டதேயில்லை, ஆம், அது இப்பொழுது முடிந்து விட்டது, இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து, இல்லையென்றால், அவர் எங்கே? அவர் அதை செய்வதாக வாக்களித்துள்ளாரா? அதை விசுவாசிப்பவர் அனைவரும் உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி. 97சற்று முன்பு கையுயர்த்தின நீங்கள், அந்த தாய் பெண்மானைப் போல், உண்மையான கிறிஸ்தவராக இருக்க விரும்புகிறீர்களா? பரிசுத்த ஆவி இங்குள்ள போதே, அபிஷேகம் நமது மேல் தங்கியிருக்கும் போது, நீங்கள் ஏன் நடந்துவந்து, பீடத்தண்டையில் ஒரு நிமிடம் நிற்கக்கூடாது? நீங்கள் இரட்சிப்புக்காக தேவனைத் தேடினால், பீடத்தண்டை வந்து என்னுடன் ஒரு நிமிடம் நில்லுங்கள். எழுந்திருங்கள். அப்படித் தான். தேவன் உங்களைஆசீர்வதிப்பாராக. கட்டிடத்தில் வேறு யாரும், நீங்கள் எங்கிருந்தாலும், வருவீர்களா? கிறிஸ்துவைக் கண்டுகொள்ள விரும்புகிறவர்கள், இப்பொழுதே வாருங்கள். நீங்கள் அவரைச் சந்திக்கும் வரைக்கும், அவருக்கு அருகாமையில் நீங்கள் வரமுடியாது. அவர் இங்கிருக்கி றார். அவர் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார், உண்மையான ஒன்று. நீங்கள் சபையைச் சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இங்குள்ள உங்களில் பலர் சபை அங்கத்தினர்களாக சபையைச் சேர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பெற்றுக் கொண்டது அவ்வளவுதான். நீங்கள் உண்மையான ஒன்றைக்காண விரும்புகிறீர்கள். அதற்காகத் தான் இயேசு தம்மை அடையாளம் காண்பித்திருக்கிறார். 98இந்த சிறுபிள்ளை அழுது கொண்டு, தன்முகத்தில் கண்ணீர் வழிய இங்குவருவதைப் பாருங்கள். அவர்கள் இளகின மனதுள்ளவர்கள் என்பதில் வியப்பில்லை. அவர்கள் எல்லாவற்றிலும் இழுக்கப்படவில்லை. வேறொரு சிறுபிள்ளை உட்பாதையின் வழியாக வருகிறது. மற்றொன்று பின்பாகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. வயது வந்தவர்கள் தங்கள் தருணத்தை கடத்திவிட்டபோது, சிறு பிள்ளைகள் வருகின்றனர். நீங்கள் வர மாட்டிர்களா? இங்கு வந்து பீடத்தைச் சுற்றிலும் நில்லுங்கள். சபை அங்கத்தினர்களே, உங்கள் இருதயத்தில் கிறிஸ்துவைக் குறித்த அனுபவத்தைப் பெற விரும்பும் ஜனங்களே, நீங்கள் இங்கு வரமாட்டீர்களா? அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருந்து, நீங்களும் அதை மறைக்க முடியாதென்று அறிவீர்களானால், நாம் தொடருவதற்கு முன்பு, இப்பொழுது இங்கு வந்து நிற்கமாட்டீர்களா? இங்கு வாருங்கள், ஜெபத்திற்காக இங்கு நில்லுங்கள். அப்படி செய்வீர்களா? வாருங்கள், காண்பியுங்கள். அவருக்காக நில்லுங்கள். நீங்கள் அவரைக் குறித்து இப்பொழுது வெட்கப்பட்டால், அவர் உங்களைக் குறித்து அங்கே வெட்கப்படுவார்.அவர் இங்கேயிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: இது நடக்குமென்று வேதவாக்கியம் உரைக்கிறது. அவர் இங்குள்ளதாக தம்மை அடையாளம் காண்பிக்கிறார். நீங்கள் சபை அங்கத்தினராக இருந்து, கிறிஸ்துவைக் குறித்த உண்மை யானஅனுபவத்தைப் பெறாமலிருந்தால், இப்பொழுது வர மாட்டீர்களா? நான் அதிகமாக ஜனங்களை வருந்தி அழைப்பதில்லை. நான் சொல்ல விரும்பும் ஒரே ஒரு காரியம் என்னவெனில், சத்தியத்தையும் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும், அவருடைய வார்த்தை வெளிப்படுதலையும் குறித்து உங்களிடம் எடுத்துரைத்த லேயாம். 99மேலே தாழ்வாரத்தில் கையுயர்த்தின சகோதரனே, சகோதரியே, நீ கீழே வரவிரும்பினால், இங்கு உனக்காக நாங்கள் காத்திருப்போம். கீழே இறங்கி வந்து, ஒரு சிறு ஜெபத்துக்காக பீடத்தை சுற்றிலும் நில். நீ வெட்கப்பட வில்லையென்றும், நீ உண்மையான கிறிஸ்தவனா யிருக்க விரும்புகிறாயென்றும் உலகம் அறிந்து கொள்ளட்டும், இயேசு அறியட்டும். நாங்கள் சற்று நேரம் காத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் வரமாட்டாயா? சபை அங்கத்தினனே, வெது வெதுப்பானவனே, பின் வாங்கிப்போனவனே, நீ இப்பொழுது வந்த மற்றவர்களுடன் நிற்கமாட்டாயா? நீ தேவனுடைய இராஜ்யத்தில் பிறந்திருக்கிறாய் என்னும் அனுபவத்தை தேவனிடம் பெறாமலிருந்தால், இங்கு வந்து நில். 100நீ வேறெதைக்காண விரும்புகிறாய்? நான் கர்த்தருடைய நாமத்தில் உன்னிடம் கூறுகிறேன் என்பதை ஞாபகம் கொள்வாயாக. என்னை அவருடைய ஊழியக்காரனாக நீகருதினால், வேத வாக்கியங்களின்படி, சபை காணும் கடைசி அடையாளம் இதுவே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் தோன்றுவதற்கு முன்பு ஆபிரகாம் இதை கடைசி அடையாளமாகக் கண்டான். நாம் ஆபிரகாமின் ராஜரீகசந்ததியார். ஆபிரகாம் கண்ட அதே அடையாளத்தையே ராஜரீக சந்ததியார் புறஜாதி உலகம் எரிவதற்கு முன்பு காண்பார்கள் என்று இயேசு வாக்குரை த்துள்ளார். இதை வேறு எந்த காரணத்தைக் கொண்டும் தள்ளிவிட வேண்டாம். நீங்கள் அதை அசட்டை செய்துவிட வேண்டுமென்று சாத்தான் முயற்சி செய்கிறான். இப்பொழுதே வாருங்கள். இம்மானுவேலின் இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு அங்கு பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் போது தங்கள் பாவக்கறையைப் போக்கிக் கொள்கின்றனர்.மரித்துக் கொண்டிருந்த கள்ளன் தன் நாளில்அந்த ஊற்றைக் கண்டு பூரித்தான்.நானும் அவனைப் போல் தீயவனாயிருந்த போதிலும் என் பாவங்கள் அனைத்தையும் அங்கு கழுவிக்கொள்கிறேன். இப்பொழுது வந்து அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? வேறு யாராகிலும் ஜெபத்துக்காக இங்கு வந்து நிற்பார்களென்று கருதி சிறிது நேரம் காத்துக் கொண்டிருக்கிறேன். 101நாம் ஜெபிக்கும் போது, இங்குள்ள போதகர் சகோதரர் இங்குவந்து, என்னுடன் கூட சுற்றிலும் நிற்கும்படியாக கேட்டுக்கொள்ளப் போகிறேன்; ஆத்துமாக்களுக்காக கவலைகொண்டிருக்கும் அங்குள்ள போதகர்கள், உங்கள் சபைக்கு வரும் உங்கள் அயலகத்திலுள்ள இந்த சில ஜனங்கள்; ஆத்துமாக்கள் கிறிஸ்துவினிடம் வர வேண்டு மென்று சிரத்தை கொண் டிருப்பவர்கள், இது இயேசு கிறிஸ்து என்று விசுவாசிப்பவர்கள். நான் இயேசு கிறிஸ்து அல்ல என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் உங்கள் சகோதரன், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. உங்களைப்போல் நானும் ஒருவன். ஆனால் அது நம்மோடு கூட உள்ள பரிசுத்த ஆவியாகிய இயேசு கிறிஸ்து தமது வார்த்தையை நிறைவேற்றுதல். அவர் அதை செய்ய வேண்டிய தில்லை, ஆனால் அவர் அதை செய்வதாக வாக்களித்துள்ளார். இயேசு பிணியாளிகளை சுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவரைக் குறித்து சொல்லப்பட்டவை நிறைவேறுவதற்காக அவர் அப்படி செய்தார்' 'என்று வேதம் கூறுகிறது. நீங்கள் எந்த பெயர் கொண்ட ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கிறீர்கள் என்பதைக் குறித்து எங்களுக்கு கவலையில்லை. இயேசு கிறிஸ்து இங்கேயிருக்கிறார் என்றும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் மறுபடியும் பிறந்த அனுபவம் ஒன்றுண்டு என்றும் நீங்கள் விசுவாசித்தால் போதும். 102போதகர்களே, இங்குள்ள ஜனங்களின் மத்தியில் செல்லுங்கள். அவர்கள் மத்தியில் வந்து, அவர்கள் மேல் உங்கள் கைகளை வையுங்கள். நாங்கள் அவர்களுக்காக ஜெபத்தை ஏறெடுக்கப் போகின்றோம். நமது சபையோர் சிறிதுநேரம் தங்களால் இயன்றவரை பயபக்தியாயிருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிசுத்த ஆவி என்ன செய்வாரென்று நமக்கென்ன தெரியும்! அப்படித்தான். உள்ளே சென்று, ஜனங்கள் மத்தியில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவர்களைச் சுற்றி வாருங்கள். இப்பொழுது ஞாபகம்கொள்ளுங்கள், நீங்கள் செய்யக் கூடிய ஒன்றே ஒன்றுண்டு, அதுதான் அவர் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளதை ஏற்றுக்கொள்ளுதலாம், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் உண்மைத்து வத்தை நீங்கள் கண்டதுண்டா? அதற்கு பயபக்தியாயும் மரியாதை கொடுக்கும் விதத்திலும் சபையோர் ஒரு நிமிடம் எழுந்து நிற்கும்படிக்கு அவர்களைக் கேட்டுக் கொள்ளப்போகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள். நீங்கள் செய்த எல்லாவற்றையும் அறிக்கை செய்யுங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்ய முடியும். அதன் பிறகு, உங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேளுங்கள். அதை ஏற்றுக் கொண்டு, விசுவாசியுங்கள். ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வழியில் ஜெபம் பண்ணுங்கள். 103எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் பாவக்கறை கொண்ட ஆத்துமாக்களுடன் உம்மிடம் வருகிறோம். அந்த தாய் மானின் கதை எவ்வளவு ஆழமாக பதிந்துவிட்டது. தென்தேசத்து ராஜஸ்திரீபூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனின் ஞானத்தைக் கேட்க வந்தது போல், இந்த ஜனங்களும் ஏதாவதொன்றை செய்யவேண்டுமென்றும், அல்லது உண்மையான ஒன்றைக்காண வேண்டுமென்றும் விரும்புகின்றனர். சாலொமோனிலும் பெரியவர், மானிடரின் இரட்சகர், நசரேயனாகிய இயேசு இங்கே இருக்கிறார் பிதாவே, இவர்களை இரட்சியும். இவர்களுடைய பாவங்களை மன்னியும். இவர்களுடைய ஆத்துமாக்களை ஆட்டுக்குட்டியான வருடைய இரத்தத்தில் கழுவி, கிறிஸ்தவராவதற்கு மறுபடியும் பிறந்த அனுபவத்தை அவர்களுக்குத் தாரும். அந்த தாய் மானைத் தவிர, வேறெந்த மிருகமும், வேறெதுவுமே அதை செய்திருக்க முடியாது. அது தாய் மானாக இருந்தது. கர்த்தாவே, இப்பொழுது எங்களுக்கு பரிசுத்த ஆவி இங்குள்ளபோதே, தேவனுடைய ராஜ்யத்தில் மறுபடியும் பிறந்த அந்த அனுபவத்தைத் தாரும். பிதாவே, அதை அருளும். பிதாவே, அதை அருளும். 104இப்பொழுது உங்கள் கண்களை மூடி, உங்கள் கைகளையுயர்த்தி, இயேசுவே இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். நான் இருக்கிறபடியே என்னை ஏற்றுக்கொள்வீராக. என்னால் வேறொன்றும் செய்யமுடியாது. வியாதிப்பட்டுள்ள என் சரீரத்தை சுகப்படுத்தும். கர்த்தாவே, என்னை ஏற்றுக்கொள்ளும். நீர் இங்கேயிருக்கிறீர்; பரிசுத்தஆவி இங்கு இருந்துகொண்டு தம்மை அடையாளம் காண்பிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, உமது கிருமையினால் என்னை இரட்சியும். இதை செய்ய மாத்திரமே நான் அறிந்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் '' என்று அறிக்கை செய்யுங்கள். சகோ. கிராண்ட், ஜெபத்தில் நடத்துவீரா?